என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பேத்கர் பிறந்தநாள்"

    • மாணவர்களின் முன்னேற்றம் கண்கள் போன்றது, பெண்களின் முன்னேற்றம் இதய துடிப்பு போன்றது.
    • வெறுப்பு அரசியலை விடவும் அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது ஆற்றல் வாய்ந்தது.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்திப்பிடிக்கும் இயக்கம் திராவிட இயக்கம்.

    * கொள்கை பிடிப்பு மிக்க அரசியல் தலைவராக திருமாவளவன் இருக்கிறார்.

    * சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது.

    * கடந்த 4 ஆண்டுகளில் 6,900-க்கும் அதிகமாக சமூக நீதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி உள்ளோம்.

    * மாணவர்களின் முன்னேற்றம் கண்கள் போன்றது, பெண்களின் முன்னேற்றம் இதய துடிப்பு போன்றது.

    * மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டத்தில் ஆதிதிராவிடர் சமூக சகோதரிகள் அதிக பயனடைந்துள்ளனர்.

    * பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஆண்டுக்கு ரூ.250 கோடி வீதம் தொல்குடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    * சாதி எனும் 1000 ஆண்டு அழுக்கை போக்குவது தான் நமது நோக்கம்.

    * ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் அதிகாரத்தை கொடுத்ததுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்திய மாற்றம்.

    * வெறுப்பு அரசியலை விடவும் அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது ஆற்றல் வாய்ந்தது.

    * சாதிய பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.

    * சாதிய ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்று நமது மனதில் ஏற்பட்டுள்ள மாற்றம் அனைவரது மனதிலும் ஏற்பட வேண்டும்.

    * சமூக பணிகளாலும் சட்டப் பணிகளாலும் சமத்துவத்தை நோக்கிய நகர்வுகளை சாத்தியப்படுத்துவோம்.

    * ஆதிதிராவிடர், பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு எப்போதும் துணை நிற்கும்.

    * சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் 10 கிராமங்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.

    * இந்தாண்டும் சிறந்த 10 கிராமங்களுக்கு சமூக நல்லிணக்க விருது வழங்கப்பட உள்ளது.

    * திருவள்ளுவர் நாளன்று அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைப்பதே நமது இறுதி இலக்கு.
    • அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம்.

    சென்னை:

    துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒடுக்கப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு கல்வி-ஒற்றுமை-போராட்டமுமே நிரந்தவழி என முழங்கியவர். அறிவுச் சாட்டையைச் சுழற்றி பேதங்களின் எலும்புகளை நொறுக்கிய மாமேதை. இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று!

    இந்நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தவர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கல்வியை குலைத்து, மாணவர்கள் மத்தியில் பிற்போக்குத்தனத்தை நிலைநிறுத்தும் கனவுலகில் மிதந்தவர்களுக்கு அண்ணல் இயற்றிய சட்டத்தின் வழியில் பல்கலைக்கழகங்களை காத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

    அண்ணலின் கருத்துகள் கற்றறிவதற்கு மட்டுமல்ல, காலச் சூழலுக்கு ஏற்ப களத்தில் செயல்படுத்தி வெற்றியடைவதும் முக்கியம். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைப்பதே நமது இறுதி இலக்கு. அதற்கு அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிக்க வழி என்ற நூலை தமிழில் வெளியிட்டவர் பெரியார்.
    • ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை முதலில் எடுத்துக்கூறியவர் எம்.சி.ராஜா.

    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * வரலாற்றை மாற்றிய அம்பேத்கரின் பிறந்தநாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்.

    * தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாள், அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாள்.

    * அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிக்க வழி என்ற நூலை தமிழில் வெளியிட்டவர் பெரியார்.

    * சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கி வரலாற்றை மாற்றியவர் அம்பேத்கர்.

    * ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மாற்றத்திற்கான சிந்தனை உயர வேண்டும் என்பதற்காகத்தான் சமத்துவ நாள் கொண்டாட்டம்.

    * ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை முதலில் எடுத்துக்கூறியவர் எம்.சி.ராஜா.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவிலேயே அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு
    • நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறது.

    அண்ணல் அம்பேத்கர் 135-வது பிறந்த நாளான இன்று சமத்துவ நாளாக தமிழ்நாடு அரசு கொண்டாடி வருகிறது.

    தமிழ்நாடு அரசின் சமத்துவ நாள் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

    * பொருளாதார வளர்ச்சியில் நாட்டில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி உள்ளது

    * எல்லோருக்கு எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

    * இந்தியாவிலேயே அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடும் ஒரே மாநிலம் தமிழ்நாடு

    * தமிழகத்தை பிரித்தாளும் சூழ்ச்சிகளை கண்டறிந்து நாம் வீழ்த்த வேண்டும்.

    * பட்டியலின, பழங்குடியின மக்கள், சமூகம் மற்றும் பொருளாதார விடுதலை அடைய திமுக அரசு பாடுபடும்.

    * நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்திற்கான நீதி, நீட் ஒழிப்பில் அரசு உறுதி

    * நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறது

    * திராவிட மாடல் ஆட்சியில் எல்லா நாளும் சமத்துவ நாளாக அ நாளாக அமையட்டும்

    என்று தெரிவித்தார்.

    • தனக்குவமை இல்லாத புத்துலகப் புத்தர் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள்... சமத்துவ நாள்!
    • நம்மை வழிநடத்தும் அறிவுலகச் சூரியன் அம்பேத்கர் வாழ்க!

    நாடு முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

    சாதி எனும் ஆயிரமாண்டு அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் - தனக்குவமை இல்லாத புத்துலகப் புத்தர் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள்... சமத்துவ நாள்!

    ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நம் பயணத்தில் என்றும் நம்மை வழிநடத்தும் அறிவுலகச் சூரியன் அம்பேத்கர் வாழ்க!

    'எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கிய நமது திராவிட மாடல் பயணத்தில், பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியா கண்டே தீருவோம்! ஜெய்பீம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மரவனேரியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நாடு முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் மரவனேரியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து கட்சி தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.

    • அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் தமிழ்நாடு அரசு சார்பில் சமத்துவ நாள் விழாவாக இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து உருவப்படத்துக்கு மலர் தூவி வணங்கினார்.

    அங்கு அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக அமைச்சர்கள் வரவேற்றனர்.

    இதைத் தொடர்ந்து அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றார். உறுதி மொழியை அவர் வாசிக்க அங்கிருந்த அனைவரும் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றனர். அந்த வாசகம் வருமாறு:-

    சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதி ராகவும், தொடர்ந்து போ ராடி, ஒதுக்கப்பட்டவர்களு டைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய, நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கருடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமு தாயத்தை அமைக்க, நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களைச் சாதியின் பெயரால் ஒரு போதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்து வத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன்.

    இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

    • டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
    • அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    நாடு முழுவதும் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேரண ஸ்தலத்தில் அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • பாலவாக்கத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
    • சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

    சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ந்தேதி ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    நாடு முழுவதும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசியல் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருக

    அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ந்தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
    • யாரும் தனித்தனியாக சென்று மாலை அணிவிக்க வேண்டாம்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகப் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நிர்வாகிகளுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நம் கட்சித் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் நமது கொள்கை தலைவர்களில் ஒருவரான இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான நாளை (14-ந்தேதி) அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் தங்கள் மாவட்டம் சார்பாக மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கண்டிப்பாக ஒன்றிணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும். யாரும் தனித்தனியாக சென்று மாலை அணிவிக்க வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஏப்ரல் 14-ம் நாள் ஆண்டுதோறும் சமத்துவ நாளாகக் கடைப் பிடிக்கப்படுகிறது.
    • படைப்புகளை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 13.4.2022 அன்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் "வடக்கே உதித்த சமத்துவச் சூரியன், பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன்" நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் நாளை, "சமத்துவ நாளாக" கொண்டாடுவது என்று 110 விதியின் கீழ் அறிவித்தார்.

    அதனடிப்படையில், ஏப்ரல் 14-ம் நாள் ஆண்டுதோறும் சமத்துவ நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

    அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் வாயிலாக "சமத்துவம் காண்போம்" என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் சமூக ஊடகங்களான எக்ஸ் தளம் (எக்ஸ்), படவரி (இன்ஸ்டாகிராம்), முகநூல் (பேஸ்புக்), புலனம் (வாட்ஸ்அப்), வலையொளி (யூடியூப்) வாயிலாக இன்று முதல் 30-ந்தேதி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    "சமத்துவம் காண்போம்" என்கிற முழக்கம் சமூகநீதி என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இப்போட்டிகளில் வெற்றி பெறும் வெற்றியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

    எனவே, பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அதிக அளவில் இப்போட்டிகளில் பங்கேற்கு மாறும், தங்களது படைப்புகளை அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அரசு அறிவித்துள்ளது.

    போட்டி 1 :- ஒரு கதை சொல்லட்டுமா?

    சமூகநீதி அல்லது கல்வியின் முக்கியத்துவம் (அல்லது) உங்களுக்குப் பிடித்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எது? என்பது குறித்துக் கதைக ளைப் பதிவிட வேண்டும். வடிவங்கள் : ரீல்ஸ் (1 நிமிடம்) அல்லது ஒரு பக்கக் கதை.

    போட்டி 2: ஓவியம் வரைதல் போட்டி, சமத்துவம் காண்போம், அளவு : 1 எம்பி

    போட்டி 3: வினாடி - வினாப் போட்டி, அடிப்படை உரிமைகள் (அல்லது) இந்திய அரசியல் அமைப்பு - அடிப்படைகள்.

    போட்டி 4: மீம்ஸ் போட்டி

    போட்டியாளர்கள் பெண் கல்வி, சமத்துவம் அடிப்படையில் மீம்ஸ்களை உருவாக்கி அனுப்ப வேண்டும். அளவு : அளவு1 எம்பி

    போட்டி 5: வலையொலி, "நான் அண்ணல் அம்பேத்கராக இருந்தால்" - நீங்கள் அண்ணல் அம்பேத்கராக மாறினால், தற்போதைய உலகில் எந்தெந்த மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்? (அல்லது) அண்ணல் அம் பேத்கரின் கொள்கைகள் - இன்றைய காலத்திற்கேற்ற அதன் பங்கு. அளவு : 1 முதல் 3 நிமிடங்கள் வரை (2 எம்பி), படைப்பாளிகள் தங்களது படைப்பினை ஒலி வடிவில் (தமிழில்) பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    போட்டி 6: உரிமைகளுக்கான ராப் பாடல் அனைவரும் சமம் என்ற தலைப்பில் பிரீ ஸ்டைல் ராப் செய்து ஒலி வடிவில் அனுப்ப வேண்டும். அளவு : 1 முதல் 3 நிமிடங்கள் வரை (2 எம்பி)

    போட்டி 7: செல்பி மற்றும் ஹாஷ்டாக் போட்டி அண்ணல் அம்பேத்கர் சிலை அல்லது போஸ்டர்க ளுடன் செல்பி "இந்திய அரசியலமைப்பு" புத்தகத்து டன் செல்பி, அரசியல் அமைப்பின் முன்னுரையுடன் செல்பி என்ற ஹாஷ்டாக்குடன் பதிவு களை உங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டு, tndipr சமூக ஊடகக் கணக்கை குறிச்சொல் செய்ய வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் பின் தொடர்பவர்களும் சமத்துவத்திற்கான உயர்வு என்ற ஹாஷ்டாக்குடன் இப்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். (அளவு: 1 எம்பி)

    போட்டி 8: சமூக ஊடகங்களின் மூலம் விழிப்புணர்வு பங்கேற்பா ளர்கள் தங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ் டாகிராம் ஸ்டோரியில் அண்ணல் அம்பேத்கரின் மேற்கோள்கள் அல்லது அரசியலமைப்பின் முன்னுரையைப் பதிவிட வேண்டும். அதைத் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும் பத்தினரையும் பகிர்ந்து கொள்ளச் செய்யவேண்டும்.

    அதிக எண்ணிக்கையிலான ஸ்டேட்டஸ் ஸ்கிரீன்சார்ட் பகிரப்பட்ட தன் அடிப்ப டையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    மேற்கண்ட இப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் tndiprmhsamathuvamkanbom @gmail.com என்ற மின்ஞ்சல் மற்றும் (கியூ ஆர் கோடு) வாயிலாகத் தங்கள் படைப்புகளை 30-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.

    இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×