என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீராடல்"
- கடந்த மாதம் 21-ந் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
- அன்று முதல் 24-ந் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள வடுகபாளையத்தில் எழுந்தருளியுள்ள கண்ணனூர் மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த மாதம் 21-ந் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. அன்று முதல் 24-ந் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
தொடர்ந்து 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை தினந்தோறும் இரவு பூவோடு பற்ற வைத்து ஆடும் நிகழ்ச்சியும், மீண்டும் காலையில் பூவோடு ஆடி கோவில் முன்பு கீழே கொட்டி அம்மன் பாடல்களை வருத்தி பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
30-ந் தேதி மாலை அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்துதலும், இரவு மாவிளக்கு பூஜையும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று கம்பம் பிடுங்கி, கோவில் பூசாரி தோளில் சுமந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் பொதுகிணற்றில் விடும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வடுகபாளையத்தில் உள்ள கண்ணனூர் மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா, விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.