என் மலர்
நீங்கள் தேடியது "ஜிஎஸ்டி வசூல்"
- ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
- வருமான வரி செலுத்தும் அளவிற்கு கூட தான் சம்பாதிக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.
சமீப காலமாக சாமானியர்களுக்கு கொடிக்கணக்கில் ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த வாரம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தள்ளுவண்டி முட்டை கடைக்காரருக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தக்கோரி வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களின் பெயரில் நடந்த பணப்பரிமாற்றங்களை மேற்கோள் காட்டி இந்த நோட்டீஸ்கள் வந்திருந்தன.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் மாதம் ரூ.5,000 ஊதியம் பெறும் ராஜ்குமார் சிங் என்ற வாட்ச்மேனுக்கு ரூ.2.2 கோடி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸை பார்த்து அதிர்ந்துபோன ராஜ்குமார், வருமான வரி செலுத்தும் அளவிற்கு கூட தான் சம்பாதிக்கவில்லை என வேதனை தெரிவித்தார். இவரின் பேன் கார்ட் மூலம் சட்டவிரோதமாக பரிமாற்றம் நடந்துள்ளதா என விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- எங்களிடம் ரூ.50 கோடி இருந்தால், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க நாம் ஏன் சிரமப்பட வேண்டும்
- நாங்கள் உணவுக்கே சிரமப்படுகிறோம்.. எங்களிடம் இவ்வளவு பணம் இருந்தால், எங்கள் மகன் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்? என்று ரஹீஸின் தாய் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முட்டை கடைக்காரருக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தக்கோரி வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் பறந்துள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டத்தில், தள்ளுவண்டியில் முட்டை விற்று பிழைப்பு நடத்துபவர் சுமன். இவருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோடீஸில், பிரின்ஸ் சுமன், அரசுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆக ரூ.6 கோடி பாக்கி வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நோடீஸில், 2022 ஆம் ஆண்டு டெல்லியில் சுமனின் பெயரில் "பிரின்ஸ் எண்டர்பிரைசஸ்" என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தோல், மரம் மற்றும் இரும்பு வர்த்தகத்தில் ஈடுபட்டது என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய சுமன், "நான் வண்டியில் மட்டுமே முட்டைகளை விற்கிறேன். நான் டெல்லிக்கே இதுவரை சென்றதில்லை. பின் அங்கு ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது என்பது எப்படி சாத்தியம்" என்று தெரிவித்துள்ளார்.
சிறிய மளிகைக் கடை நடத்தி வரும் சுமனுடைய தந்தை ஸ்ரீதர் சுமன் பேசுகையில், "எங்களிடம் ரூ.50 கோடி இருந்தால், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க நாம் ஏன் சிரமப்பட வேண்டும்?" என்றார்.
சுமனின் தனிப்பட்ட ஆவணங்களை யாரோ தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக அவருக்கு தெரிந்த வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதை விசாரிக்க காவல்துறை மற்றும் வருமான வரி அதிகாரிகளை அணுகியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு மத்தியில் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் ஜூஸ் விற்பனையாளரான எம்.டி. ரஹீஸுக்கு ரூ.7.5 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அவருக்கு அனுப்பப்பட்ட நேட்டீஸில், 2020-21 ஆம் ஆண்டில் அவரது பெயரில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போலி பரிவர்த்தனைகள் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், "இந்த நோட்டீஸ் எதற்க்கு என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஜூஸ் மட்டுமே விற்கிறேன். இவ்வளவு பணத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. அரசாங்கம் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் ஒரு ஏழை. நான் ஒரு பொய் வழக்கில் சிக்க வைக்கப்படக்கூடாது" என்று தெரிவித்தார்.
"நாங்கள் அன்றாட உணவுக்கே சிரமப்படுகிறோம்.. எங்களிடம் இவ்வளவு பணம் இருந்தால், எங்கள் மகன் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்?" என்று ரஹீஸின் தாய் கூறினார்.
2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்காக கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை அளிக்க ரஹீஸின் தனிப்பட்ட ஆவணங்கள் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஐடி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- கடந்த பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி வசூலாகியிருந்தது.
- கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு கூடுதலாக 13 சதவீதம் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்தம் ரூ.1,60,122 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. அமலான காலம்தொட்டு இதுதான் 2-வது அதிகபட்ச வசூல் ஆகும்.
முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் மிக அதிகளவில், ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடி அளவுக்கு இருந்தது.
கடந்த மார்ச் மாத ஜி.எஸ்.டி வசூலில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.29,546 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.37,314 கோடியும் வசூலாகி இருக்கிறது.
ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.82,907 கோடி ஆகும். இதில் பொருட்கள் இறக்குமதி வரி ரூ.42,503 கோடியும், செஸ் வரி ரூ.10,355 கோடியும் அடங்கும்.
ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் கடந்த மார்ச் மாதம் இதுவரையில் இல்லாத வகையில் அதிகளவில் அமைந்துள்ளது.
2022-23 நிதி ஆண்டில் மொத்தம் ரூ.18 லட்சத்து 10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீதம் அதிகம் ஆகும். மாதாந்திர சராசரி என்று எடுத்துக்கொண்டால் ரூ.1.51 லட்சம் கோடி ஆகும்.
- மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 14-வது முறையாக ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது.
- கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு கூடுதலாக 12 சதவீதம் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி:
இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மே மாத மொத்த ஜிஎஸ்டி வரியாக ரூ.1,57,090 கோடி வசூலாகியுள்ளது.
கடந்த மே மாத ஜி.எஸ்.டி வசூலில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.28,411 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. ரூ.35,828 கோடியும் வசூலாகி இருக்கிறது.
ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.81,363 கோடி ஆகும்.
கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு கூடுதலாக 12 சதவீதம் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து 14-வது முறையாக ரூ.1.40 லட்சம் கோடியை கடந்துள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 5-வது முறையாக ரூ.1.50 லட்சம் கோடியை கடந்துள்ளது.
அதேபோல், கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்தாண்டு மே மாதத்தில் பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானமும் 12 சதவீதமும், உள்நாட்டு பரிமாற்றங்கள் மூலம் கிடைத்த வருமானமும் 11 சதவீதம் அதிகம் ஆகும்.
- ஆறு ஆண்டுகளில் மொத்த ஜிஎஸ்டி வசூல் நான்காவது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
- ஏப்ரலில் வருவாய் ரூ.1.87 லட்சம் கோடியை எட்டியது.
இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.
இந்நிலையில், ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 12 சதவீதம் அதிகரித்து ரூ.1.61 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்ததில் இருந்து, மொத்த ஜிஎஸ்டி வசூல் நான்காவது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரி வசூல் குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நடப்பு ஆண்டு ஜூன் மாதத்தில் 1,61,497 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 31,013 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 38,292 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ. 80,292 கோடி (இறக்குமதியில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் ரூ.39,035 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ. 11,900 கோடி (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்படும் ரூ. 1,028 கோடி உட்பட) ஆகும்.
ஜூன் 2023க்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 12 சதவீதம் அதிகமாகும். இந்த மாதத்தின் போது, உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து பெற்ற வருவாயை விட 18 சதவீதம் அதிகமாகும்.
ஏப்ரலில் வருவாய் ரூ.1.87 லட்சம் கோடியை எட்டியது. மே மாதத்தில் இது ரூ.1.57 லட்சம் கோடியாக இருந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியீடு.
- மொத்த ஜிஎஸ்டி வசூல் 7-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது.
இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாய் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.
கடந்த டிசம்பர் மாதத்தில், ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 882 கோடி ஜி.எஸ்.டி. வசூல் ஆகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 507 கோடி மட்டுமே வசூலாகி இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது 10 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த நவம்பர் மாதம் வசூலான ரூ.1 லட்சத்து 68 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், டிசம்பர் மாத வசூல் குறைவு ஆகும்.
2023-24-ம் நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 7-வது முறையாக ரூ.1.60 லட்சம் கோடியைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.