search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் குளத்தில் இருந்த மீன்கள் இறந்திருக்கலாம்."

    • கோவில் ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
    • அதிகாரிகள் ஆய்வு

    திருவணணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள கிளி கோபுரம் அருகே பிரம்ம தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்தில் முக்கிய விழா நாட்களில் தீர்த்தவாரி நடைபெறும்.

    இதில் பக்தர்கள் இறங்காத அளவிற்கு இரும்பு கேட் கொண்டு அடைக்கப்பட்டு உள்ளது. இந்த குளத்தில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று குளத்தில் உள்ள ஆயிரகணக்கான மீன்கள் செத்து மிதந்தன.

    இதை கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் அலுவலர்கள் குளத்தில் செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து கோவில் அலுவலர்களிடம் கேட்ட போது:-

    கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் குளத்தில் இருந்த மீன்கள் இறந்திருக்கலாம். இருப்பினும் முறையாக அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தால் மட்டுமே என்ன காரணத்திற்காக மீன்கள் இறந்தது என்பது தெரியவரும் என்றனர்.

    ×