search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரோ ரெயில் நிலையம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரமாக சோதனை நடத்தினர்.
    • ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. லட்சக்கணக்கான பயணிகள் தினமும் மெட்ரோ ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு படை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சுமார் 1 மணி நேரமாக சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    நேற்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

    • கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
    • மற்றபிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

    சென்னை:

    போக்குவரத்து போலீசார் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சி.எம்.ஆர்.ஆர். நிலையங்களில் கட்டுமான பணிக்காக அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரெயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் ஸ்டேர்லிங் சாலை மெட்ரோ ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடேஸ் ரோடு உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கனவே உள்ளபடி). இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும்.

    இதேபோல், ஜெமினி மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள். உத்தமர் காந்தி சாலை. கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம். (மாற்றுப்பாதை ஒரு வழிப்பாதை).

    அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தக்கரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம். (ஏற்கனவே உள்ளபடி).

    வள்ளுவர் கோட்டத்தில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு. ஜி.என்.செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) சென்று அடையலாம்.

    மற்றபிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிபாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
    • வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    எழும்பூர் ரெயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.

    மேலும் ரெயில் நிலைய கட்டிடங்கள், பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம், காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை அருகே வணிக வளாகங்கள் அமைத்தல், புதிய பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், பார்சல்களை கையாள நடைமேம்பாலம், புதிய ரெயில்வே குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வாகன நிறுத்தும் இடம் உள்ளது. தற்போது அந்த பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகளால் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் நாளை முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரெயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இதனால் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்து பயணிகளும் நாளை(5-ந்தேதி) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.

    • ஒவ்வொரு மழையிலும் இந்த ரெயில் நிலையத்தில் இதே நிலைதான்.
    • தண்ணீர் உள்ளே வராமல் தடுப்பதற்கு நிரந்தர தீர்வு எதுவும் காணவில்லை என்று பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

    வண்ணாரப்பேட்டை - விமானநிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை மெட்ரோ ரெயில் வழித் தடத்தில் ரெயில் போக்கு வரத்தில் பாதிப்பு ஏற்பட் டுள்ளது.

    ஆனால் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலை யத்துக்கு பயணிகள் செல்ல முடியாத அளவுக்கு ரோட்டில் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்து நின்றது. வாகன நிறுத்தும் இடம் முழுவதும் தண்ணீர் புகுந்து நின்றது.

    அங்கிருந்த தண்ணீரை வெளியேற்றினாலும் டைல்சுகளில் சகதி ஒட்டி இருப்பது வெளியே தெரிவ தில்லை. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் வழுக்கி கீழே விழுந் தனர்.

    ஒவ்வொரு மழையிலும் இந்த ரெயில் நிலையத்தில் இதே நிலைதான். தண்ணீர் உள்ளே வராமல் தடுப் பதற்கு நிரந்தர தீர்வு எதுவும் காணவில்லை என்று பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள். அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, 'ரெயில் நிலை யங்களுக்குள் தண்ணீர் தேங்கினால் உடனுக்குடன் அப்புறப்படுத்த தேவையான பணியாளர்களும், மோட்டார் போன்ற வசதி களும் செய்யப்பட்டு இருப்ப தாக தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் பைக் டாக்சி இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
    • ஒருசில மெட்ரோ ரெயில் நிலையங்களில் மட்டும் பெண் பயணிகளின் நலனுக்காக பைக் டாக்சி வசதி செய்து கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தனியாா் நிறுவனத்துடன் இணைந்து, பெண்கள் மட்டுமே இயக்கும் வகையில், இணைப்பு இருசக்கர வாகன (பைக் டாக்சி) வசதியை கடந்த ஏப்ரல் 13-ந் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் முதல கட்டமாக, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூா், சைதாப்பேட்டை உள்ளிட்ட சில மெட்ரோ ரெயில் நிலையங்களில் பைக் டாக்சி சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தன.

    இதற்கு, வாடகை ஆட்டோ தொழிலாளா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்த நிலையில், தமிழகத்தில் பைக் டாக்சி இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பையடுத்து, சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் உள்ள ஒருசில மெட்ரோ ரெயில் நிலையங்களில் மட்டும் பெண் பயணிகளின் நலனுக்காக பைக் டாக்சி வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், இதற்காக, குறிப்பிட்ட அந்த தனியாா் நிறுவனத்துடன், நாங்கள் எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தடை இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்ததைத் தொடா்ந்து, மெட்ரோ ரெயில் நிலையங்களில் பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது எந்த ரெயில் நிலையத்திலும் இந்த சேவை இல்லை.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    • மெட்ரோ ரெயிலில் பயணித்தால் கட்டணத்தில் சலுகை உண்டு. மின்சார ரெயிலில் பயணிப்பவர்களுக்கு சலுகை கிடைக்காது.
    • பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் மெட்ரோ ரெயில் நிலையம் பாரபட்சம் காட்டுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    சென்னை:

    சென்னையில் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பயdisணிகளுக்கு போக்குவரத்து நெருக்கடியை குறைத்துள்ளது.

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகளும் முடிந்துவிட்டால் சென்னையில் எந்த பகுதிக்கும் எளிதாக சென்று வர முடியும்.

    அதற்கு ஏற்ற வகையில்தான் மின்சார ரெயில் நிலையங்களுடன் மெட்ரோ ரெயிலும் இணைக்கப்படுகிறது. பரங்கிமலை, கிண்டி, திரிசூலம் மின்சார ரெயில் நிலையங்களில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையங்களுக்குள் நடந்து செல்லும்படி வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    இதனால் தற்போது இரு சக்கர வாகனங்களில் தொலை தூரங்கள் வரை செல்வதை தவிர்த்து விட்டு பலர் மெட்ரோ நிலைய பார்க்கிங்கில் டூ வீலரை நிறுத்தி செல்கிறார்கள். பார்க்கிங் கட்டணமாக 6 மணி நேரம் வரை ரூ.10-ம் 12 மணி நேரம் வரை ரூ.15-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற 14-ந்தேதி முதல் பார்க்கிங் கட்டணத்தை ஒரு மடங்கு அதிகமாக உயர்த்தி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இனி 6 மணி நேரம் வரை ரூ.20, 12 மணி நேரம் வரை ரூ.30, 12 மணி நேரத்துக்கு மேல் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மாதாந்திர கட்டணமும் 6 மணி நேரத்துக்கு ரூ. 500-ல் இருந்து ரூ.750 ஆகவும், 12 மணி நேரத்துக்கு ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் மெட்ரோ ரெயில் நிலையம் பாரபட்சம் காட்டுவது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

    அதாவது மெட்ரோ ரெயிலில் பயணித்தால் கட்டணத்தில் சலுகை உண்டு. அதாவது பழைய கட்டணமே வசூலிக்கப்படும். மின்சார ரெயிலில் பயணிப்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது. அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    இரண்டு நிறுவனங்களும் அரசு நிறுவனங்கள்தான். இதில் ஏன் பயணிகளிடம் பாகுபாடு காட்ட வேண்டும் என்று மின்சார ரெயில் பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

    • வடபழனி விம்கோ நகர், சென்ட்ரல், நந்தனம், திருமங்கலம் பகுதிகளில் போட்டிகளை காணலாம்.
    • ரூ.10 கட்டணம் செலுத்தி ரெயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அகமதாபாத்தில் கடந்த 31- ந் தேதி தொடங்கியது. இதுவரை 5 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 6-வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை காண மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஐபிஎல் போட்டிகளை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்.இ.டி. டிவிகள் மூலம் ரெயில் நிலையம் உள்ளே ஐபிஎல் போட்டி ஒளிபரப்பப்படுகிறது.

    வடபழனி விம்கோ நகர், சென்ட்ரல், நந்தனம், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் ரூ.10 கட்டணம் செலுத்தி போட்டிகளை காணலாம்.

    ×