என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாஜக பிரமுகர் கொலை"
- வெங்கடேசன் பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- மதுகுடிக்க அழைத்து சென்று அவர்கள் தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்தது.
தாம்பரம்:
தாம்பரம் அருகே உள்ள பழைய பெருங்களத்தூர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் (33).ரவுடியான இவர் மீது புரட்சி பாரதம் நிர்வாகி ராஜா கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. பாரதிய ஜனதா கட்சியில் பெருங்களத்தூர் மண்டல எஸ்.சி. அணி தலைவராக இருந்தார்.
நேற்று காலை வெங்கடேசன் பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான குணா, சதீஷ் குமார், சந்துரு, அருண் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெருங்களத்தூர் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்களை மடக்கி விற்பதில் வெங்கடேசுடன் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. மதுகுடிக்க அழைத்து சென்று அவர்கள் தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்தது.
- கொலையுண்ட வெங்கடசேனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
- போலீசார் வெங்கடேசனை இந்த பகுதியில் தற்போது இருக்க வேண்டாம் என்று எச்சரித்து உள்ளனர்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூர், காமராஜர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் என்கிற பீரி வெங்கடேசன்(வயது35). ரவுடியான இவர் மீது தாம்பரம், பீர்க்கன்கரணை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் பாரதிய ஜனதா கட்சியில் பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதி பட்டியலின மண்டல தலைவராக இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை பழைய பெருங்களத்தூர், குட்வில் நகரில் உள்ள காலி இடத்தில் இருந்த முட்புரில் வெங்கடேசன் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் பீர்க்கன் கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வெங்கடேசன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் பழிக்குப்பழியாக தீர்த்து கட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாணையை தீவிரப்படுத்தி கொலையாளிகள் குறித்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
வெங்கடேசன் நேற்று இரவு கடைசியாக யாருடன் சென்றார்? அவரை அழைத்து சென்றவர்கள் யார்? யார்? என்ற விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசனுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 3 பேர் ஜெயிலில் இருந்து வெளியே வந்து உள்ளனர். தற்போது அவர்கள் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்து உள்ளது. அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
கொலையுண்ட வெங்கடசேனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு வீட்டில் இருந்த அவரை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்றனர். இதில் வெங்கடேசன் உயிர் தப்பினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்போது போலீசார் வெங்கடேசனை இந்த பகுதியில் தற்போது இருக்க வேண்டாம் என்று எச்சரித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து வெங்கடேசன் புதுபெருங்களத்தூரை விட்டு வெளியே சென்றார். இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அவர் ஊருக்கு வந்து உள்ளார். இதனை அறிந்த எதிர்தரப்பினர் வெங்கடேசனை நோட்டமிட்டு பழிதீர்த்து விட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் பா.ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதா பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பி.பி.ஜி.சங்கர் நேற்று இரவு நசரத்பேட்டை சிக்னல் அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.
- கொலை தொடர்பாக சென்னை எழும்பூர் 13-வது கோர்ட்டில் இன்று மதியம் 9 பேர் சரண் அடைந்தனர்.
சென்னை:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும் பா.ஜனதா எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாநில பொருளாளருமான பி.பி.ஜி.சங்கர் நேற்று இரவு நசரத்பேட்டை சிக்னல் அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக சென்னை எழும்பூர் 13-வது கோர்ட்டில் இன்று மதியம் 9 பேர் சரண் அடைந்தனர். அவர்களில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது. சரண் அடைந்த 9 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். இதற்கிடையே சங்கரின் உடல் வைக்கப்பட்டுள்ள கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பா.ஜனதா கட்சியினரும், அவரது ஆதரவாளர்களும் இன்று மதியம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
- தமிழகத்தின் கோவையில் கோவிலை தகர்க்க சதி நடந்தது.
- புதுவையின் பிராந்தியமான கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள மாகீ பிராந்தியத்திலும் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மங்கலம் தொகுதி பாஜக பொறுப்பாளர் செந்தில்குமரன் கடந்த 26-ந் தேதி வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இவர் புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் உறவினர் ஆவார். வில்லியனூர் கண்ணகி பள்ளி அருகே டீ கடையில் நின்றிருந்தபோது ஒரு கும்பல் 2 நாட்டு வெடிகுண்டை வீசி தலையில் அரிவளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த படுகொலை தொடர்பாக ரவுடி நித்தியானந்தம் உட்பட 7 பேர் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தனர். இவர்களை வில்லியனூர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்த பதுக்கி வைத்திருந்த மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகளை கோர்க்காடு பகுதியில் உள்ள காலிமனையில் இருந்து போலீசார் மீட்டனர்.
சரணடைந்தவர்களிடம் விசாரணை முடிந்து இன்று மீண்டும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில் பா.ஜனதா பிரமுகர் கொலை குறித்து என்.ஐ.ஏ. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் விசாரணையில் இறங்கி உள்ளனர். பெங்களூருவில் இருந்து 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் புதுவைக்கு வந்தனர். புதுவையில் போலீஸ் காவலில் இருந்த நித்தியானந்தம் உட்பட 7 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
பின்னர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கிருந்து வெடிகுண்டு துகள்களையும் கைப்பற்றினர். புதுவை போலீசாரிடமும் விளக்கம் கேட்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளையும் பார்வையிட்டனர்.
இன்றும் அவர்கள் 2-வது நாளாக தொடர் விசாரணை நடத்துகின்றனர். தேசிய புலனாய்வு முகாமை தானாகவே முன்வந்து பா.ஜனதா பிரமுகர் கொலையை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஏனெனில் தமிழகம், கேரளா மாநிலங்களில் சமீபகாலமாக தொடர்ந்து பா.ஜனதா நிர்வாகிகள், இந்து அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொலைகள் அரங்கேறி வருகிறது.
இந்து அமைப்பினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளது.
தமிழகத்தின் கோவையில் கோவிலை தகர்க்க சதி நடந்தது. இந்த சதி செயல் தொடர்புடையவர்களை என்.ஐ.ஏ. அமைப்பினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவையின் பிராந்தியமான கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள மாகீ பிராந்தியத்திலும் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நடந்துள்ளது. இதனால் பா.ஜனதா பிரமுகர் செந்தில்குமரன் கொலையில் பயங்கரவாத இயக்கத்தினருக்கு தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகளா? என்ற கேள்வி எழுந்ததின் அடிப்படையிலேயே அவர்களை தனித்தனியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் புதுவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்