என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
- கொலையுண்ட வெங்கடசேனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
- போலீசார் வெங்கடேசனை இந்த பகுதியில் தற்போது இருக்க வேண்டாம் என்று எச்சரித்து உள்ளனர்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த புதுபெருங்களத்தூர், காமராஜர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் என்கிற பீரி வெங்கடேசன்(வயது35). ரவுடியான இவர் மீது தாம்பரம், பீர்க்கன்கரணை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் பாரதிய ஜனதா கட்சியில் பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதி பட்டியலின மண்டல தலைவராக இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை பழைய பெருங்களத்தூர், குட்வில் நகரில் உள்ள காலி இடத்தில் இருந்த முட்புரில் வெங்கடேசன் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் பீர்க்கன் கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வெங்கடேசன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் பழிக்குப்பழியாக தீர்த்து கட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் விசாணையை தீவிரப்படுத்தி கொலையாளிகள் குறித்து தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
வெங்கடேசன் நேற்று இரவு கடைசியாக யாருடன் சென்றார்? அவரை அழைத்து சென்றவர்கள் யார்? யார்? என்ற விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசனுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 3 பேர் ஜெயிலில் இருந்து வெளியே வந்து உள்ளனர். தற்போது அவர்கள் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் வலுத்து உள்ளது. அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
கொலையுண்ட வெங்கடசேனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு வீட்டில் இருந்த அவரை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்றனர். இதில் வெங்கடேசன் உயிர் தப்பினார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்போது போலீசார் வெங்கடேசனை இந்த பகுதியில் தற்போது இருக்க வேண்டாம் என்று எச்சரித்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து வெங்கடேசன் புதுபெருங்களத்தூரை விட்டு வெளியே சென்றார். இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அவர் ஊருக்கு வந்து உள்ளார். இதனை அறிந்த எதிர்தரப்பினர் வெங்கடேசனை நோட்டமிட்டு பழிதீர்த்து விட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அவர் பா.ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜனதா பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்