என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அருணாசல பிரதேசம்"
- மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 600 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.
- சில பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இடாநகர்:
அருணாசல பிரதேசத்தில் அரசு பள்ளிகளின் நிலை குறித்த கேள்வி ஒன்றுக்கு சட்டசபையில் கல்வி மந்திரி பசங் டோர்ஜி சோனா பதில் அளித்தார்.
அப்போது அவர், மாநிலத்தில் செயல்படாத அல்லது மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 600 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
சில பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதைப்போன்ற மேலும் சில பள்ளிகளை மூட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
- 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
- பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் பீமா காண்டு மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.
அருணாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி பீமா காண்டு உள்பட பா.ஜ.க.வை சேர்ந்த 5 வேட்பாளர்களுக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
நேற்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் பீமா காண்டு மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 3-வது முறையாக பீமா காண்டு அருணாசல பிரதேசத்தின் முதல் மந்திரி ஆகிறார்.
இதையடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை நேற்று சந்தித்தனர். அப்போது அவர்களை ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் பீமா காண்டு அருணாசல பிரதேசத்தின் முதல் மந்திரி 3-வது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அருணாசல பிரதேச சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது.
- 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
இடா நகர்:
அருணாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி பீமா காண்டு உள்பட பா.ஜ.க.வை சேர்ந்த 5 வேட்பாளர்களுக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
இதற்கிடையே, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பீமா காண்டு மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 3-வது முறையாக பீமா காண்டு அருணாசல பிரதேசத்தின் முதல் மந்திரி ஆகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை இன்று சந்தித்தனர். அப்போது அவர்களை ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து பதவியேற்பு விழா நாளை நடைபெறுகிறது.
- அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என அறிவித்தது.
- இந்த வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இடா நகர்:
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 19-ம் தேதி நடந்த பாராளுமன்ற முதல் கட்ட தேர்தலுடன், சட்டசபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது.
இதில் சில வாக்குச்சாவடிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. மேலும் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்திருந்தன. இவ்வாறு 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்நிலையில், அந்த வாக்குச்சாவடிகளில் 24ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆதரவாளர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தார்.
- முன்னாள் எம்.எல்.ஏ.-வை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
அருணாசல பிரதேச மாநிலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மியான்மர் எல்லை பகுதியில் அமைந்துள்ள இடாநகர் மாவட்டத்தின் ராஹோ கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.
தனிப்பட்ட வேலை காரணமாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. யெம்செம் மாட்டே தனது ஆதரவாளர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் காட்டுப்பகுதியில் வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை சுட்டுக் கொன்றவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 2009-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோன்சா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட யெம்செம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
பிறகு 2015-ம் ஆண்டு பா.ஜ.க.-வில் இணைந்த இவர், 2024 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தார். அரசியலில் இணையும் முன் யெம்செம் சங்கலாங் மாவட்டத்தின் கல்வித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
- கடந்த 2017-ம் ஆண்டு 6 இடங்களுக்கு 2021-ம் ஆண்டு 15 இடங்களுக்கு பெயர்களை மாற்றி அறிவித்து இருந்தது.
- அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயர்களை சூட்டுவது இது 3-வது முறையாகும்.
புதுடெல்லி:
இந்தியாவின் அருணாசல பிரதேச மாநிலத்தை சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்று கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சனை இருக்கிறது. மேலும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதலும் ஏற்பட்டது.
இந்த நிலையில் இவ்விவகாரத்தில் சீனா மீண்டும் அடாவடியில் ஈடுபட்டுள்ளது. அருணாசல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றி சீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சீன, திபெத்திய மற்றும் பின்யின் ஆசிய மொழிகளில் சீனாவின் சீவிஸ் விவகார அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அருணாசல பிரதேசத்தில் உள்ள இரண்டு நிலப்பகுதிகள் இரண்டு குடியிருப்பு பகுதிகள், ஐந்து மலை சிகரங்கள் இரண்டு ஆறுகள் ஆகியவற்றின் பெயர்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள நிர்வாக மாவட்டங்களின் வகையையும் பட்டியலிட்டுள்ளது. இந்த இடங்கள் திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பெயர் மாற்றம் மக்களுக்கு மிக வசதியாகவும் துல்லியமாக நினைவில் வைத்து கொள்ளவும், அடையாளம் காணவும் உதவும் என்று சீனா தெரிவித்துள்ளது.
மேலும் தெற்கு திபெத்திய பகுதிகளின் அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகள் இருந்தும் வரை படத்தையும் சீனா வெளியிட்டுள்ளதாக இதில் அருணாசல பிரதேச தலைநகர் இட்ட நகருக்கு அருகில் உள்ள ஒரு நகரமும் அடங்கும்.
அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயர்களை சூட்டுவது இது 3-வது முறையாகும்.
கடந்த 2017-ம் ஆண்டு 6 இடங்களுக்கு 2021-ம் ஆண்டு 15 இடங்களுக்கு பெயர்களை மாற்றி அறிவித்து இருந்தது. இதனை நிராகரித்த இந்தியா தனது கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தான் அருணாசல பிரதேச விவகாரத்தில் சீனா மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறும்போது, 'எதார்த்தத்தை மாற்றாத பெயர்களை சீனா கண்டுபிடித்து வருகிறது. இதுபோன்ற செய்திகளை நாங்கள் பார்த்தோம். இது போன்ற முயச்சியை சீனா மேற்கொள்வது முதல் முறை அல்ல. இதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம்.
அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது. இருந்து வருகிறது. தொடர்ந்து இருக்கும்.
சீனாவால் கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை வழங்க முயற்சிப்பது உண்மையை மாற்றாது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்