search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சிக்கொல்லி தெளிப்பு"

    • முதுகுளத்தூர் பகுதிகளில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டது.
    • இந்தப் பணிகளை வேளாண்மை உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் வட்டாரத்தில் சுமார் 8,200 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பருத்தியை பொறுத்த வரை விதைப்பு முதல் அறுவடை வரை பல்வேறு நிலைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், புழுக்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தீவிர கண்காணிப்பு மேற் கொள்வது அவசியமாகிறது.

    இந்தநிலையில் நிலைக்கத்தக்க பருத்தி சாகுபடி இயக்கத்தின்கீழ் டிரோன் மூலம் பருத்தி வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் திருவரங்கம், வளநாடு, கருமல் ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த செயல் விளக்கத்தில் பங்கேற்றனர். இந்தப் பணிகளை வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) நாகராஜன் ஆய்வு செய்தார். அப்போது வேளாண் உதவி இயக்குநர் கேசவராமன் உடனிருந்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் தனதுரை, உதவி வேளாண்மை அலுவலர்கள் மணிகண்டன், முத்துராஜ் மற்றும் ஜெயக்கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×