என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால் நிறுவனம் முன்பு"

    • பால் கொள்முதலில் ஐ.எஸ்.ஐ. பார்முலாவை பின்பற்ற வேண்டும்.
    • கால்நடை தீவனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும்.

    பவானி:

    பவானி அருகே உள்ள சித்தோடு ஆவின் பால் நிறுவனம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பசும் பால் லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயில் இருந்து 42 ரூபாயும், எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு 44 ரூபாயில் இருந்து 51 ரூபாயும் வழங்க வேண்டும்.

    ஆவினுக்கு பால் வழங்கும் கறவை இனங்களுக்கு ஆவின் செலவில் இலவச காப்பீடு வசதி செய்து தரவேண்டும். கிராம சங்கங்களில் பால் கொள்முதலில் ஐ.எஸ்.ஐ. பார்முலாவை பின்பற்ற வேண்டும்.

    கால்நடை தீவனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும். சங்கத்தில் பரிசோதனை செய்யபட்ட பாலின் தரம் அளவு அடிப்படையில் ஒப்புகை சீட்டு வழங்கி காலதாமதம் இன்றி பாலுக்கான பணம் பட்டுவாட செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அவர்கள் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பால் உற்பத்தியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    ×