என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட மான்"

    • கர்நாடக எல்லை நுழைவாயிலில் கர்நாடக வனத்துறை சார்பில் சோதனைசாவடி அமைக்கப்பட்டுள்ளது.
    • சாலை அருகே வனத்துறை கட்டிடம் அமைந்துள்ளதால் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த கடமான் அழகை ரசித்து செல்கிறார்கள்.

    மேட்டூர்:

    தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதி பாலாறு ஆகும். இங்குள்ள கர்நாடக எல்லை நுழைவாயிலில் கர்நாடக வனத்துறை சார்பில் சோதனைசாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடி அருகே வனத்துறைக்கு சொந்தமான அலுவலகம் கட்டிடம் அமைந்துள்ளது.

    இதனை சுற்றியும் வனப் பகுதி என்பதால் இந்த பகுதிகளில் யானை, மான், முயல், நரி போன்ற வன விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். குறிப்பாக மாலை நேரத்தில் பாலாற்றில் தண்ணீர் அருந்துவதற்காக யானைகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறது.

    இதை அந்த சாலையை வாகனங்களில் கடந்து செல்லும் ஏராளமான சுற்றுலா பகுதிகளில் நின்று ரசித்துச் செல்வார்கள். இது மட்டுமின்றி கர்நாடக வனத்துறை அலுவலகம் மற்றும் சோதனை சாவடி ஆகிய பகுதிகளில் கடமான் ஒன்று தினசரி வந்து செல்கிறது. சாலை அருகே வனத்துறை கட்டிடம் அமைந்துள்ளதால் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகளும் இந்த கடமான் அழகை ரசித்து செல்கிறார்கள்.

    மக்களைக் கண்டு அச்சப்படாமல் தைரியமாக இந்த பகுதியில் உலாவரும் கடமான் நாள்தோறும் வந்துசெல்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×