search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "camp பரிசோதனை"

    • 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர்.
    • 120 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கபிஸ்தலம் வட்டார சுகாதார நிலையத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தமிழரசி முகாமினை தொடங்கி வைத்தார். முதல்வரின் நேர்முக உதவியாளர் முகமது பீரான் ஷெரிப் முன்னிலை வகித்தார்.

    தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் காயத்ரி தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் ரத்தம் சேகரித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் வழங்கினார்கள் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது.

    120 -க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடல் பரிசோதனை செய்து கொண்டனர். பொது மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் தீபக் டாக்டர்கள் ராம்குமார், ஜெகநாதன், பாரதி சுகாதார ஆய்வாளர்கள் செல்லப்பா, நாடிமுத்து ஆகியோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பனைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

    ×