search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒருநாள் உலகக் கோப்பை தொடர்"

    • 8-ந் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் பலப்பரீட்சை நடத்துகிறது.
    • இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.

    10 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அகமதாபாத்தில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியாக நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

    இதனை தொடர்ந்து வரும் 8-ந் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் பலப்பரீட்சை நடத்துகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இன்று சென்னை வந்தடைந்தனர்.

    இந்நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. தன்மையுடன் ஒன்று கூறுகிறேன். டிக்கெட் கேட்டு யாரும் என்னை தொந்தரவு செய்யாதீர்கள். வீட்டில் இருந்தே கிரிக்கெட்டை பாருங்கள் என தெரிவித்துள்ளார்.

    இந்த இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதல் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    • இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது.

    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் நாளை அகமதாபாத் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

    ஒவ்வொரு உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்கும் போது அனைத்து அணியின் கேப்டன்களும் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பையுடன் 10 அணியின் கேப்டன்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை ஐசிசி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    • இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது.
    • இந்த போட்டி சென்னையில் 8-ந் தேதி நடைபெறுகிறது.

    கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி அகமதாபாத் மைதானம் தயார் நிலையில் உள்ளது. நாளைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் (பிற்பகல் 2 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சென்னையில் 8-ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர்.

    இந்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரும் சிஎஸ்கே அணி வீரருமான ஜடேஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது வீட்டிற்கு வந்ததாக ஸ்டோரி வைத்துள்ளார். இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • ஏழு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்
    • ஆடம் ஜம்பா, அகர் ஆகியோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக இடம் பிடிப்பு

    50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் அறிவித்து வருகின்றன. நேற்று இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அறிவித்துள்ளது.

    கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுகிறார். ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் (ஆல்ரவுண்டர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ் (ஆல்ரவுண்டர்), மிட்செல் ஸ்டார்க், கேமரூன் க்ரீன் (ஆல்ரவுண்டர்), சீன் அப்போட் ஆகிய ஆறு வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டன் உடன் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

    ஆடம் ஜம்பா, ஆஷ்டோன் அகர் ஆகியோர் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். கிளென் மேக்ஸ்வெல் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராக செயல்படுவார்.

    ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கம்மின்ஸ், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. ஆலேக்ஸ் கேரி, 4. ஜோஸ் இங்கிலிஸ், 5. சீன் அப்போட், 6. ஆஸ்டோன் அகர், 7. கேமரூன் க்ரீன், 8. ஜோஷ் ஹேசில்வுட், 9. டிராவிஸ் ஹெட், 10. மிட்செல் மார்ஷ், 11. மேக்ஸ்வெல், 12. மார்கஸ் ஸ்டோய்னிஸ், 13. டேவிட் வார்னர், 14. ஆடம் ஜம்பா, 15. மிட்செல் ஸ்டார்க்.

    • உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இன்று இந்தியா அறிவித்தது.
    • அக்டோபர் 7-ந் தேதி தென் ஆப்பிரிக்கா அணி முதல் லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர் கொள்கிறது.

    இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5-ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

    உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இன்று இந்தியா அறிவித்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியும் உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளது.

    அக்டோபர் 7-ந் தேதி தென் ஆப்பிரிக்கா அணி முதல் லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர் கொள்கிறது.

    தென்னாப்பிரிக்கா அணி:

    1. டெம்பா பவுமா (கேப்டன்) 2. ஜெரால்ட் கோட்ஸி 3. குயின்டன் டி காக் 4. ரீசா ஹென்ட்ரிக்ஸ் 5. மார்கோ ஜான்சன் 6. ஹென்ரிச் கிளாசென் 7. சிசண்டா மகலா 8.கேசவ் மஹராஜ் 9. ஐடன் மார்க்ரம் 10. டேவிட் மில்லர் 11. லுங்கி என்கிடி 12. அன்ரிச் நார்ட்ஜே 13. தப்ராஸ் ரபஹாம் 14. டாகிசோ ரபஹாம் 15. ராஸ்ஸி வான் டெர் டுசென்.

    • ஷ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
    • அவருக்கு 3 மாதம் ஓய்வு தேவை என்பதால், அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

    இந்திய அணியின் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர். 2019 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் 4-ம் வரிசையில் இறங்குவதற்கு பரிசோதிக்கப்பட்ட வீரர்களில் ஒருவர்.

    ஒருநாள் அணியில் தனக்கான இடத்தை பிடித்த அவருக்கு காயமடைவதுதான் பெரிய பிரச்னையாக இருந்தது. இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தான் 4-ம் வரிசைக்கான முதன்மை வீரர். மேலும் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை பிடித்துவிட்டார்.

    இந்நிலையில், முதுகுப்பகுதியில் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடந்த டெஸ்ட் போட்டியில் பாதியிலேயே காயம் காரணமாக அவர் விளையாட வரவில்லை. இதையடுத்து ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. ஆகையால், அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கி 3 போட்டியிலும் டக் அவுட்டானார்.முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகினார்.

    இந்த நிலையில் தான் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து அவருக்கு 3 மாதம் ஓய்வு தேவை என்பதால், அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

    எனினும், வரும் அகடோபர் மாதம் தொடங்க இருக்கும் 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை தொடரில் கண்டிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • எல்லைக்கோட்டில் பந்தை துள்ளி தடுக்க முற்பட்ட வில்லியம்சன், கீழே விழுந்ததில், காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • வலதுகாலில் கட்டு போட்டநிலையில் கம்பூன்றியபடி அவர் விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் காட்சி வைரலானது.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். சென்னைக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் எல்லைக்கோட்டில் பந்தை துள்ளி தடுக்க முற்பட்டபோது கீழே விழுந்ததில் வலது கால்முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டது. அத்துடன் நடையை கட்டிய அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார்.

    இதையடுத்து அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்பினார். வலதுகாலில் கட்டு போட்டநிலையில் கம்பூன்றியபடி அவர் விமானநிலையத்தில் இருந்து வெளியேறும் காட்சி வைரலானது.

    இந்த நிலையில், முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்தியாவில் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. அவர் அணியில் இருந்து விலக நேரிட்டால், டாம் லாதம் அணியை வழிநடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×