search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஸ் விலை"

    • சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில்தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உரையாற்றினார்.

    சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

    இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், கேஸ் சிலிண்டர்களின் விலை மாதமாதம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் இந்த மாதம் (மார்ச்) சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன்படி ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், எரிவாயு சிலிண்டரின் நிலையான விலையை உறுதி செய்வதற்கும், பாதகமான சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து உற்பத்தியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்குவதற்கும் நடவடிக்கையாக

    மத்திய அமைச்சரவை நேற்று திருத்தப்பட்ட சமையல் எரிவாயு விலை நிர்ணய வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், "நாட்டில் சமையல் எரிவாயுவின் நிலையான விலையை உறுதி செய்யவும், பாதகமான சந்தை ஏற்ற இறக்கங்களில் இருந்து உற்பத்தியாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கும் வகையில் மாதாந்திர அறிவிப்பு இருக்கும்.

    இப்போது, எரிவாயு விலை, சர்வதேச ஹப் எரிவாயு விலைக்கு பதிலாக, இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு எரிவாயுவின் விலை இந்திய கச்சா எண்ணெயின் சர்வதேச விலையில் 10% ஆக இருக்கும், அது மாதந்தோறும் அறிவிக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.

    மேலும், இது குழாய் இயற்கை எரிவாயுவை (பிஎன்ஜி) 10 சதவீதம் மலிவாகவும், சிஎன்ஜி விலை 6 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை குறையும் என்றும் எண்ணெய் செயலர் பங்கஜ் ஜெயின் தெரிவித்தார். இதற்கான அறிவிப்பை அரசு நாளை வெளியிடும். இந்த முடிவு சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்றும் கூறினார்.

    ×