என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனிதவெள்ளி"

    • புனித வெள்ளியைெயாட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.
    • மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தபடி வந்தனர்.

    கடலூர்:

    ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக வரும் 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.இதை நினைவு கூறும் வகையில் இன்று புனித வெள்ளியைெயாட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. அந்த வகையில் கடலூர் புனித கார்மேல் அன்னை ஆலயம், புனித எபிபெனி சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும், மணவெளி அக்கினி எழுப்பு தல் தேவாலயத்திலும், ஆற்காடு லூத்தரன் திருச்ச பையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. பங்கு தந்தை தலைமையில் இந்த சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது.

    அப்போது கிறிஸ்தவர்கள் பாட்டுப்பாடியும், கிறிஸ்து பாடு மரணத்தை உணர்த்தும் ஏழு வார்த்தைகளை கூறி பிரார்த்தனை செய்தபடி வந்தனர். அதேபோல் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது.கிறிஸ்தவ தேவாலயத்தில் மும்மணிநேர தியான ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பா திரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம் மேல்பட் டாம்பாக்கம் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவால யங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் ஏராள மான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். சிலுவையில் அறையப் பட்ட 3–-வது நாளில் ஏசு உயிர்த்தெழுந்தார். இதை நினைவு கூறும் வகையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி அன்று அதிகாலையில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களி லும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

    • மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர்.
    • கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை பவனி நடை பெற்றது.

    சென்னை:

    இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்து வந்த காலத்தை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மீது பவனியாக அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது குருத்தோலை களை பிடித்தவாறு ஜெருசேலம் மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை பவனி நடை பெற்றது.

    சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளில் சிலுவையை செய்து கையில் பிடித்தவாறு கிறிஸ்தவர்கள் ஆலயத்தை சுற்றியும், தெருக்கள், வீதிகளிலும், பவனியாக சென்றனர்.

    சென்னையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள், தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) ஆலயங்கள், மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்தே, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.

    சென்னை சாந்தோம் பேராலயம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், மாதவரம் புனித அந்தோணியார் ஆலயம், சின்னமலை தேவாலயம், கத்தீட்ரல் பேராலயம், புதுப்பேட்டை புனித அந்தோ ணியார் ஆலயம் உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆல யங்களிலும் இன்று குருத்தோலை பவனி நடந்தது.

     குருத்தோலை பவனியில் சென்ற கிறிஸ்தவர்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்ற பாடலை பாடியபடி சென்ற னர். பின்னர் ஆலயங்களில் பேராயர்கள், பாதிரியர்கள், போதகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

    • கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
    • புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம்.

    சென்னை:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு உயிரை துறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தியானிப்பார்கள்.

    இயேசு சிலுவையில் உயிரை விடுவதற்கு முன்பு 7 வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகள் குறித்து ஆலயங்களில் தியானிக்கப்படும். அவர் சிலுவையில் முதலாவதாக பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே! என்று கூறினார். இவை உள்ளிட்ட 7 வார்த்தைகள் குறித்து தியானிக்கும் மும்மணி தியான ஆராதனை நாளை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெறுகிறது.

    கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதேபோல சி.எஸ்.ஐ., மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட எல்லா திருச்சபைகளிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம். மும்மணி தியான ஆராதனை முடிந்த பிறகு தான் கிராஸ் பன், மோர் அல்லது கஞ்சி போன்றவற்றை சாப்பிடுவார்கள். முன்னதாக இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. தனது சீடர்களுடன் இயேசு கடைசி இராப்போஜனம் விருந்து மேற்கொள்ளும் நிகழ்ச்சியை நினைவுப்படுத்தி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து இயேசு சிலுவையில் அடித்து கொல்லப்படுகிறார். சிலுவையில் உயிரைவிட்ட அவர் 3-வது நாள் உயிர்த்தெழுந்து வருவதை தான் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ×