என் மலர்
நீங்கள் தேடியது "கொரோனா தடுப்பூசி"
- தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
- தமிழகத்தில் பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் ஒரே ஒரு தடுப்பூசி மையம் மட்டுமே செயல்படுகிறது.
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் பெரும்பாலானோ 2 தடுப்பூசிகளை போட்டுள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒமைக்ரான் தொற்று 3-வது அலையை ஏற்படுத்தியது. அப்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பிணகள் தொடங்கியது. ஆனால் ஒமைக்ரான் தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்பதால் பொரும்பாலான பொதுமக்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடவில்லை.
இந்த நிலையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை தடுக்கவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் பலர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வந்துள்ளனர்.
அவர்கள் தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. சென்னையில் ஒரே ஒரு தடுப்பூசி மையம் மட்டுமே செயல்படுகிறது.
இங்கு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி கிடைக்கிறது. கிண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே உள்ளது. மற்ற மருத்துவ மனைகளில் தடுப்பூசிகள் கிடைப்பதில்லை. கோவின் செயலியில் தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய முடிகிறது. அனால் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி கிடைப்பது காரணமாக உள்ளது.சென்னையில் ஒரு தடுப்பூசி மையமும், மதுரையில் ஒரு தடுப்பூசி மையமும் செயல்பட்டு வருகிறது. ஆனால் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி உள்பட பல மாவட்டங்களில் ஒரு தடுப்பூசி மையம் கூட இல்லை.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அது குறைந்த அளவு பாதிப்பையே ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்களில் 60 ஆயிரம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால் பொது மக்கள் 20 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்:-
'தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கடந்த ஆண்டு தடுப்பூசிகள் கிடைத்த போது கொரோனா தொற்று குறைந்ததால் பொதுமக்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை போட ஆர்வம் காட்டவில்லை. தடுப்பூசி உற்பத்தி கடந்த 8 மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தடுப்பூசி நிறுவனங்கள் தங்களுக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளனர்' என்றார்.
இது குிறத்து தனியார் மருத்துவமனை மேலாளர்கள் கூறுகையில்,
'கடந்த ஆண்டு போல தடுப்பூசி வீணாகாமல் இருக்க, தடுப்பூசிகளுக்காக பொதுமக்கள் முன்பதிவு செய்த பிறகே தடுப்பூசி கொள்முதல் செய்ய முடிவு எடுத்துள்ளோம்' என்றார்.