search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனத்துறை போராட்டம்"

    • 30-க்கும் மேற்பட்ட காடர் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறார்கள்.
    • வீடுகளுக்கு மின்சாரம், டிஜிட்டல் கல்வி ஆகியவை வழங்கப்படு கின்றன.

     பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சர கத்தில் பரம்பிக்குளம் செல்லும் வழியில் எருமைபாறை வனக்கிராமம் உள்ளது. ஆனைமலை குன்று காடுகளை பூர்வீகமாக கொண்ட 30-க்கும் மேற்பட்ட காடர் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறார்கள்.

    தேன் சேகரிப்பு, கிழங்கு தோண்டுதல், மிளகு, மூலிகை சேகரிப்பு மற்றும் சிறு வன மகசூல் ஆகிய வற்றை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

    இந்தநிலையில் உலாந்தி வனச்சரகத்தில் உள்ள பழங்குடியின கிராமங்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரி டாப்சிலிப்பில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தி ன் மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறியதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு அருகே கேரள மாநிலத்தின் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள், நடைபாதைகள், வீடுகளுக்கு மின்சாரம், டிஜிட்டல் கல்வி ஆகியவை வழங்கப்படு கின்றன. ஆனால் இங்குள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர அரசு மறுக்கிறது. குறிப்பாக எருமை பாறை பழங்குடியின கிராமத்துக்கு மின் இணைப்பு வழங்க மின் மாற்றி அமைக்கப்பட்டும், இன்று வரை மின் இணைப்பு வழங்கவில்லை.

    கோழிகமுத்தி, கூமாட்டி கிராமங்களுக்கு நிலத்தடி யில் புதை வட கம்பி அமைத்து மின் இணைப்பு வழங்க வேண்டும். மேலும் சாலை வசதிகளை மேம்படு த்தி தர வேண்டும். பழங்குடி யினர் மேம்பாட்டுக்கு என வன த்துறை சோதனைச்சா வடி களில் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்ப டுகிறது.

    உலாந்தி வனச்சரகத்தில் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறுகளை சீரமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். வனத்துறையில் பணிபுரியும் பழங்குடியின ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு அளித்த இலவச பொருட்களான இலவச டி.வி., மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றுக்கு மலர் வளையம் வைத்து உலாந்தி வனச்சரகர் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×