என் மலர்
நீங்கள் தேடியது "மீண்டும் நிலையை"
- மீண்டும் தேர் இழுக்கப்பட்டு தேர் நிலையை வந்து அடைகின்றது.
- ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது இந்தக் கோtpலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் வெகு விமர்சியாக குண்டம்-தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 16-ந் தேதி பூச்சாட்டுடன் குண்டம- தேர் திரவிழா தொடங்கி நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து கடந்த 5-ந் தேதி குண்டம் திருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 7-ந் தேதி தேர் இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதை தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக சாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதையடுத்த இன்று (திங்கட்கிழமை) மாலை மீண்டும் தேர் இழுக்கப்பட்டு தேர் நிலையை வந்து அடைகின்றது.
மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு பாரிவேட்டையும், அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் வசந்தோற்சவம் (மஞ்சள் நீராட்டு) விழாவும் நடக்கிறது
விழாவையொட்டி அந்தியூர், தவுட்டுப்பாளையம், வெள்ளைய ம்பாளையம், சின்னத்தம்பி பாளையம், சங்கரா பாளையம்,எண்ண மங்க லம், செல்லம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்க ள் வந்து தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.