search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய உறுப்பினர்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநாட்டில் கட்சி கொடி மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளன.
    • புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என புதிய அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தொடர்ந்து கட்சி வளர்ச்சி பற்றி அடுத்தடுத்து புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.

    அரசியல் பணிகளுக்காக புதிய வியூகங்களை அமைப்பது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    முதலில் உள்கட்சி கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் விஜய் உத்தரவின் பேரில் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் நடந்தது.

    இதில் கட்சிக்கு 2 கோடி உறுப்பினர்களை புதிதாக சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


    அடுத்த கட்டமாக மாவட்ட தலைவர்கள், மகளிரணி நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் என புதிய நிர்வாகிகள் அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை 100 ஆக பிரித்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    விஜய் தற்போது 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.

    இதைத் தொடர்ந்து புதிய அரசியல் பயணத்தை அதிரடியாக அறிவித்த விஜய் கட்சியின் முதல் மாநாட்டை மதுரையில் பிரமாண்டமாக நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டில் கட்சி கொடி மற்றும் கொள்கைகள் அறிவிக்கப்பட உள்ளன. பெண்கள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்களை கவரும் வகையில் கட்சி கொள்கைகள் மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலி அடுத்த வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.

    • தி.மு.க.வில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு கடந்த மாதம் 7-ந் தேதி முதல் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
    • 2-வது கட்டமாக வருகிற 27-ந்தேதி முதல் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்பட உள்ளதாக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க.வில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு கடந்த மாதம் 7-ந் தேதி முதல் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக வருகிற 27-ந்தேதி முதல் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்பட உள்ளதாக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்துக்கான உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது

    மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும் திட்டக்குழு தலைவர் மெர்லியண்ட்தாஸ் பேச்சு

    நாகர்கோவில் : குமரி மாவட்ட திட்ட க்குழு உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்ப ட்டனர். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் அவர்க ளுக்கான பதவி ஏற்பு விழா மற்றும் முதல் கூட்டம் இன்று நடந்தது.

    திட்ட குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். மாவ ட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், திட்ட அதிகாரி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். திட்ட குழு உறுப்பினர்களாக நீலபெருமாள், ஜாண்சிலின் விஜிலா, பரமேஸ்வரன், சிவகுமார், ராஜேஷ் பாபு, ஆதிலிங்க பெருமாள், மேரி ஜெனட் விஜிலா, விஜிலா, ஜாண் சிவன் ராபர்ட், லாரன்ஸ், ஸ்டாலின் தாஸ் ஆகியோர் பதவி ஏற்று க்கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் பேசிய தாவது:- நாகர்கோவில் சவேரியார் ஆலயம் பகுதியில் ரோட்டில் கடந்த 50 ஆண்டுகளாக மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கி வந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி சாலைகள் சேதம் அடைந்து வந்தது. ஒரு கிலோ மீட்டர் சாலையை சீரமைக்க ரூ.90 லட்சம் வரை செலவாகி வந்தது. 50 ஆண்டு காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைக்கு நான் மேயராக பதவி ஏற்ற பிறகு அதை தீர்க்க என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆணையர் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை மேற்கொண்டேன்.

    அப்போது சாலையின் ஒரு புறத்திலிருந்து மறுபுற த்திற்கு பைப் லைன் அமைத்து விட்டால் தண்ணீர் தேங்காமல் இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ரூ.3 லட்சம் செலவில் அந்த பைப் லைன் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த பகுதியில் தண்ணீர் தே ங்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. திட்டமிட்டு செய்ததின் காரணமாக பலன் கிடைத்துள்ளது. எனவே ஒரு பணியை செய்யும் போது அனைவரும் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து திட்ட குழு தலைவர் மெர்லி யன்ட் தாஸ் கூறுகையில், திட்ட குழுவானது குமரி மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். ஊராட்சி, பேரூராட்சி வளர்ச்சிகாக மட்டும் அல்லாது ஒட்டுமொ த்த மாவட்டத்தின் வளர்ச்சி க்காக திட்டமிட வேண்டும். இன்று திட்டமிட கூடிய திட்டம் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு பிறகு பய ன்பாட்டுக்கு வரும்போது அது அனைவருக்கும் பயன் அளிக்க வேண்டும். எனவே புதிதாக தேர்ந்தெ டுக்கப்ப ட்ட திட்டக்குழு உறுப்பின ர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

    • புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • வடக்கு தொகுதியில் மட்டும் 374 பூத்கள் உள்ளன.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் குமார்நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிச்சாமி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ,சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பேசியதாவது :- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்சியை வலுவாக வழிநடத்தியது போல அதை விட 4 மடங்கு மக்களை கவர்ந்து எளிமையின் அடையாளமாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்த கூட்டத்தின் நோக்கம் ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

    மேலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். ஒரு பூத்திற்கு 200 புதிய உறுப்பினர்களை சேர்ப்பதே நோக்கமாக இருக்க வேண்டும். இதில் மகளிர் சுயக்உதவிகுழுவில் இருந்து 25 பேரும், இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கு 25 பேரும், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். மன்றத்திற்கு உள்பட ஒரு பூத்திற்கு 200 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வடக்கு தொகுதியில் மட்டும் 374 பூத்கள் உள்ளன. இந்த பணிகளை வார்டு செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் 1 மாத காலம் முழுமையாக, விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டிபாலு, பகுதி செயலாளர்கள் கருணாகரன், பட்டுலிங்கம், சுப்பு, பாலசுப்பிரமணியம், பி.கே.முத்து, ஹரிஹரசுதன், 15 வேலம்பாளையம் பகுதி அவைத்தலைவர் வி.கே.பி.மணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் தண்ணீர்பந்தல் தனபால், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிச்சாமி, அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன், வார்டு செயலாளர்கள் தங்கராஜ், கனகராஜ், விஜயகுமார், ஒன்றிய அவைத்தலைவர் ஐஸ்வர்ய மகாராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×