என் மலர்
நீங்கள் தேடியது "மாணவிக்கு பரிசு"
- பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
- நேரு பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் கடந்த மாதம் இந்த போட்டி நடந்தது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து 181 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி கடந்த மாதம் நடந்தது. இந்த போட்டியில் பெரியபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் அக்பர் ஜான் பீவி பேத்தியும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் மகளுமான பெரியபட்டினம் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவி அர்ஷியா வெற்றி பெற்றார்.அவருக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் சிறப்பு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாரிச்செல்வி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சபீர்பானு உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.