search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழை தோட்டத்துக்குள்"

    • 3 காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை மிதித்தும் சேதப்படுத்தின.
    • விவசாயிகள் பட்டாசு வெடித்தும், தீபந்தம் காட்டியும் யானைகளை விரட்டினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது வனப்பகுதி யை விட்டு வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இதேபோல் சாலைகளில் நின்றும் வாகன ஓட்டிகளை அச்சு றுத்தி வருகிறது. இந்நிலையில் தாளவாடி அருகே உள்ள கரளவாடி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார். இவர் 2 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

    இந்நிலையில் ஜீர் கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் உதயகுமாரின் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. சத்தம் கேட்டு எழுந்து வந்த உதயகுமார் தோட்டத்துக்கு ஓடிவந்து பார்த்தார்.

    அப்போது வாழைகளை யானைகள் சேதப்படுத்து வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்து விவசாயி களை செல்போனில் உதவிக்கு அழைத்தார். அதன் பெயரில் அங்கு வந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்தும், தீபந்தம் காட்டியும் யானைகளை விரட்டினர்.

    அதிகாலை 3 மணி வரை அட்டகாசத்தில் ஈடுபட்ட யானைகள் அதன் பின்னரே அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன.

    யானை புகுந்ததால் சுமார் 500 வாழைகள் சேதம் அடைந்தன. இதனையடுத்து வனத்துறையினர் தனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயி உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×