என் மலர்
நீங்கள் தேடியது "செயின் திருட்டு"
- மேல் மாடியில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளனர்.
- அதிகாலை எழுந்த ஸ்ரீஜா தன் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 பவுன் மதிப்புள்ள தாலி செயினை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஒட்டப்பட்டி ஹவுஸிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ஜவகர். இவரது மனைவி ஸ்ரீஜா (வயது30). நேற்று இரவு இவரது வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களை வீட்டின் கீழ் தளத்தில் தங்க வைத்துள்ளனர்.
மேல் மாடியில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளனர். அதிகாலை எழுந்த ஸ்ரீஜா தன் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 பவுன் மதிப்புள்ள தாலி செயினை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- 2 மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
- கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந் திரன் மனைவி சுமதி (வயது 55). இவர் நேற்று ஆம்பூர் இந்திரா நகர் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் தாங்கள் போலீஸ் எனக்கூறி சுமதியிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் தாங்கள் அணிந்திருக்கும் செயினை கழற்றிபையில் வைத்துக்கொண்டு ஜாக்கிரதையாக செல்லுங்கள் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி சுமதி தான் அணிந்திருந்த செயினை கழற்றி பைக்குள் வைத்துள்ளார். அப்போது அவரது கவனத்தை திசைதிருப்பி, அவருக்கு தெரியாமல் செயினை எடுத்து சென் றுள்ளனர். சுமதி சிறிது தூரம் சென்று பார்த்தபோது பையில் வைத்திருந்த 5 பவுன் செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.