என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைபணி Public"

    • சாலை விரிவாக்க பணிகள் நெல்லிக்குப்பம் பகுதியில் இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
    • நேற்று நள்ளிரவு திடீரென்று வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது

    கடலூர்:

    கடலூர் கோண்டூரிலிருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நெல்லிக்குப்பம் பகுதியிலும் இப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. தற்போது நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக முதற்கட்டமாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. நேற்று மதியம் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யாமல், ஒரு சிலருக்கு ஆதரவாக பணிகள் மேற்கொண்டு வருவதால் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கூறி தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ம.தி.மு.க.முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுதைகள் கட்சிமாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர செயலாளர் திருமாறன்,  சமூக ஆர்வலர் குமரவேல், கவுன்சிலர்கள் முத்தமிழன், புனிதவதி மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை பணிகளுக்காக அளவீடு செய்த அளவில் ஆக்கிரமிப்பை அகற்றாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இப்பணியை உடனடியாக நிறுத்தி, உரிய அளவீடு செய்த பின்னர் பணிகளை தொடங்க வேண்டும். மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உரிய முறையில் விசாரணை நடத்தி பணிகள் நடைபெறாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்  இதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், நகர செயலாளர் திருமாறன், சமூக ஆர்வலர் குமரவேல் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பணிகள் மேற்கொண்டு இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணிகளை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டு ஊழியர்கள் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. 

    ×