search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிச்சை எடுப்போர்"

    • மதுரையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • பிச்சை எடுக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகர போக்கு வரத்து சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மேலமடை, ஆவின் சந்திப்பு, காளவாசல், பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் எண்ணற்ற குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதை பார்க்க முடிகிறது.

    இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சமூக ஆர்வலர் மருதுபாண்டி என்பவர் மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிடம் கேள்வி எழுப்பியி ருந்தார். இதற்கு பதில் அளித்து அந்த நிறுவனம் கொடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 4, 2020-ல் 15, 2021-ல் 38, 2022-ல் 56பேர் உள்பட ஒட்டுமொத்தமாக 113 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். மதுரை மாநகரில் மட்டும் கடந்த 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை கடத்தி விற்க முயன்றதாக 4 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர்.

    அதேபோல் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை 19 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவரவர் பெற்றோர் வசம் ஒப்படைக் கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சிறப்பு குழுக்கள் அமைத்து பிச்சை எடுக்கும் குழந்தைளை மீட்க வேண்டும்.

    அவர்களை வைத்து பிச்சை எடுக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×