என் மலர்
நீங்கள் தேடியது "ஜெமினி"
- சரண் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெமினி’.
- இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.
இயக்குனர் சரண் இயக்கத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜெமினி'. விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் கிரண் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், கலாபவன் மணி, வினு சக்ரவர்த்தி, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் இன்று வரை முணுமுணுக்கும் பாடல்களாக அமைந்துள்ளது. அதிலும், 'ஓ போடு' பாடல் இடம்பெறாத இசை நிகழ்ச்சிகளே கிடையாது. அந்த அளவிற்கு கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், ஜெமினி திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகளாகியுள்ளதை நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
21 years of Gemini. ? #opodu pic.twitter.com/5D7sy49hnc
— Vikram (@chiyaan) April 12, 2023
- ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் ஜெமினி சாட்பாட் கருவியை கூகுள் உருவாக்கியது
- ஜெமினி எல்லா நேரங்களிலும் நம்பத்தகுந்த ஒரு கருவி அல்ல என்கிறது கூகுள்
இணையதள தேடலில் உலகின் பெரும்பான்மையான பயனர்களின் தேடல் இயந்திரமாக (search engine) இருப்பது அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகுள் (Google) நிறுவனத்தின் கூகுள் தேடல் இயந்திரம்.
கூகுள், செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) மையமாக கொண்டு இயங்கும் ஜெமினி (Gemini) எனும் சாட்பாட் கருவியை உருவாக்கியது.
இந்நிலையில், ஒரு பயனர், இந்த சாட்பாட்டிடம், "பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஃபாசிசவாதியா?" என கேள்வி கேட்டதற்கு "ஃபாசிச கொள்கைகள் உடைய சில திட்டங்களை செயல்படுத்தியவராக பிரதமர் மோடி குற்றம் சாட்டப்பட்டுள்ளார்" என பதிலளித்தது.
தொடர்ந்து அந்த சாட்பாட் அளித்த விரிவான பதிலில் பிரதமர் குறித்து ஆட்சேபகரமான பல கருத்துகள் இருந்தன.
அதே சமயம், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் குறித்த கேள்விகளுக்கு ஜெமினி சரியான பதில் அளிக்கவில்லை.
இதை தொடர்ந்து உரையாடலின் "ஸ்க்ரீன் ஷாட்டை" ஒரு பத்திரிகையாளர் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகருக்கு அனுப்பினார்.
இது குறித்து அமைச்சர் கூகுள் நிறுவனத்திடம் ராஜிவ் சந்திரசேகர் விளக்கம் கேட்டிருந்தார்.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் கருவிகளும் செயலிகளும் முழுமையாக நம்பத்தகுந்தவை இல்லை என்பதை காரணம் காட்டி கிரிமினல் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து கொள்ள முடியாது என அவர் கூகுளை எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், இந்த குறைபாடு குறித்து கூகுள் விளக்கம் அளித்துள்ளது.
அதன் பதிலில் கூகுள் தெரிவித்திருப்பதாவது:
ஜெமினி எல்லா நேரங்களிலும் நம்பத்தகுந்த ஒரு சாதனம் அல்ல.
அதிலும், சமகால நாட்டு நடப்புகள், அரசியல் மற்றும் உடனடி செய்திகள் ஆகியவற்றில் அதன் திறன் இன்னும் முழுமை பெறவில்லை.
இந்நிலையை மாற்ற எங்கள் வல்லுனர்கள் செயலாற்றி வருகின்றனர்.
எந்த நாட்டின் சட்டதிட்டங்களையும் மீறாத வகையில் அதன் உருவாக்கத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
இவ்வாறு அந்நிறுவனம் பதிலளித்துள்ளது.
- 2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகியது ஜெமினி திரைப்படம்
- இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2002 ஆம் ஆண்டில் சரண் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பபை பெற்றது. படத்தின் பாடல்களும் செம ஹிட் ஆனது.
படம் வெளியாகி 22 வருடங்களான நிலையில், ஜெமினி பட போஸில் நடிகர் விக்ரம் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "என்மேல் அன்பு பொழியும் எல்லோருக்கும் மிக்க நன்றி. சுவாரசியமான அப்டேட் இன்னும் சில தினங்களில் எனி கெஸ்சஸ்?" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதன்மூலம், ஜெமினி படம் ரீ-ரிலிஸ் ஆக வாய்ப்புள்ளது என்றும், வரும் ஏப்ரல் 17ம் தேதி இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று டிரம்ப் கூறியுள்ளார்
- டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி ஆகியவையே அமெரிக்க நிறுவனகளே கோலோச்சி வந்தன.
இந்நிலையில் அவற்றுக்கு சவால் விடும் வகையில் சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஏஐ மாடல் அமைந்துள்ளது. இது ஏஐ உலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட நிறுவனம் டீப்சீக் (Deepseek).
இந்த நிறுவனம் தற்போது டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆர்1 மாடல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆர்1 என்பது வழக்கமான ஏஐ மாடல் ஆகும். இன்னும் பயன்பாட்டுக்கு வாராத ஆர்1 ஜீரோ தானாகவே கற்பித்துக்கொள்ளும் (self-taught) ஏஐ மாடல் ஆகும். அமெரிக்க நிறுவனங்களை விட குறைவாக 6 மில்லியன் டாலர்கள் செலவில் டீப்சீக் ஏஐ உருவாக்கப்பட்டுள்ளது.

டீப்சீக் ஏஐ மாடல் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன. ஏனெனில் டீப்சீக் ஏஐ முற்றிலும் இலவசமாகும். தற்போது சந்தையில் உள்ள சாட்ஜிபிடி, ஜெமினி ஆகியவை பயனர்களுக்குப் பழைய வெர்ஷன்களை மட்டுமே இலவசமாக வழங்குகிறது. புதிய அம்சங்களுக்குக் கட்டணம் பெறுகிறது. ஆனால் டீப்சீக் ஏஐ, அனைத்து நவீன வசதிகளையும் இலவசமாக வழங்குகிறது.
மேலும் டீப்சீக் ஏஐ மாடலை இயக்கும் செலவும் குறைவாகும். ஓபன் ஏஐ மாடலை இயக்க 10 இன்புட் டோக்கன்கள் தேவை, அதற்கு 15 டாலர் செலவாகும். ஆனால் டீப்சீக் மாடலில் அதே 10 இன்புட் டோக்கன்கள் செலவு 0.55 டாலர்கள் மட்டுமே. அதாவது ஓபன் ஏஐ மாடலை விட டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது.

மேலும் சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி ஆகியவை க்ளோஸ்ட்டு சோர்ஸ் ஏஐ மாடல்கள். ஆனால் டீப்சீக் ஏஐ ஓபன் சோர்ஸ் ஏஐ மாடல், அதவாது, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதை அணுக முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு. எனவே அமெரிக்க நிறுவனங்கள் இந்த புதிய போட்டியாளரை கண்டு நடுக்கத்தில் உள்ளன. பங்குச்சந்தையிலும் டீப்சீக் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மியாமியில் நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், டீப்சீக் ஏஐ, அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சாட்ஜிபிடி ஐ விஞ்சி ஆப்பிளின் US ஸ்டோரில் அதிகமாக இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. டீப்சீக் செயலி உலகளவில் அளவுக்கு அதிகமான டவுன்லோட்களை கடந்து அசத்தியது.
மிக குறுகிய காலக்கட்டத்தில் மிகவும் பிரபலம் அடைந்த நிலையில், டீப்சீக் தளத்தை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, டீப்சீக் சேவையை பயன்படுத்த வழிவகை செய்யும் பதிவு முறையை அந்நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.