search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிவுநீர் வாகனம்"

    • நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    • மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமலும், உரிமம் பெறாமலும் கழிவுநீர் வாகனங்களை இயக்குவ தற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிய ஆவ ணங்கள் மற்றும் அனு மதியின்றி இயக்கப்படும் கழிவுநீர் அகற்றும் வாக னங்கள் பறிமுதல் செய்யப் பட்டு நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றும் ஏற்க னவே நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா எச்ச ரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த நிலையில் வேலப்பன்சாவடி பகுதியில் கூவம் ஆற்றங்கரை மற்றும் மழைநீர் கழிவுநீர் கால்வாய்க ளில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் கழிவு நீரை கொட்டுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு வந்த தகவலை அடுத்து நேற்று இரவு திருவேற்காடு நகராட்சி சுகாதார அலு வலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த கழிவுநீர் அகற்றும் லாரி குறித்து விசாரித்தனர். விசாரணை யில் உரிய ஆவணங்கள் இன்றி அந்த கழிவுநீர் அகற்றும் வாகனம் இயக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த வாகனத்தின் உரிமை யாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் வேலப்பன்சாவடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது அந்த மருத்துவ மனை வளாகத்தில் தேவையின்றி வைக்கப்பட்டி ருந்த பொருட்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து தேவையற்ற அந்த பொருட்களை அங்கி ருந்து அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வா கத்திற்கு அறிவு றுத்தப் பட்டது. தொடர்ந்து கொசு புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்ததால் அந்த மருத்துவ மனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • கழிவுநீா் அகற்றும் வாகனங்களை இயக்குவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
    • கழிவுநீா் அகற்றும் வாகனங்களை நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    வெள்ளக்கோவில்:

    வெள்ளக்கோவிலில் கழிவுநீா் அகற்றும் வாகனங்களை இயக்குவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    குடியிருப்புகள், வணிக வளாகங்களில் இருந்து கழிவுநீா் எடுப்பதற்கும், அவற்றை வாகனங்களில் எடுத்து செல்வதற்கும், அப்புறப்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. கழிவுகளை பாதுகாப்பற்ற வகையில் அப்புறப்படுத்துவது தொழிலாளா்களின் உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தானது.

    எனவே கழிவுநீா் அகற்றும் வாகனங்களை நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கான பதிவுக் கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிமம் பெற்றவா் தவிர மற்றவா்கள் வாகனத்தை இயக்கக் கூடாது.

    விதிகளை மீறி இயக்கினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கழிவுநீர் அகற்றுவதற்கான கட்டணமாக ரூ.800 நிர்ணயம் செய்து ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
    • ரசீதுடன் விண்ணப்பம் செய்து பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சி கமிஷனர் சுரேந்திர ஷா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-ெசனனை நகராட்சி நிர்வாக இயக்குநர் செயல்முறையின்படி 15-வது மத்திய நிதிக்குழு மான்யம் 2021-22-ல் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சிக்கு 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் வாகனம் வாங்குவதற்கு நிர்வாக அனுமதி பெற்று கழிவுநீர் வாகனம்  வாங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தை பொதுமக்களின் உபயோகத்திற்குகொண்டு வருவதற்காக ஒருமுறை கழிவுநீர் அகற்றுவதற்கான கட்டணமாக ரூ.800 நிர்ணயம் செய்து நகர் மன்ற தீர்மான எண்.53, நாள்.11.4.2023-ல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் உபயோகத்திற்கு 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்நகராட்சி கழிவுநீர் வாகனத்தின் மூலம் ஒருமுறை கழிவுநீர் அகற்றுவதற்கு கட்டணமாக ரூ.800 நகராட்சி கருவூலத்தில் செலுத்தி அதற்கான ரசீதுடன் விண்ணப்பம் செய்து பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியின் கழிவுநீரினை நகராட்சி கழிவுநீர் வாகனத்தின் மூலம் அகற்றி பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    • வாகனங்களுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அதற்கான உரிமம் வழங்கப்பட உள்ளது.
    • விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதோடு உரிமமும் ரத்து செய்யப்படும்.

    காங்கயம் :

    கழிவுநீர் அகற்றும் வாகனங்களைப்பதிவு செய்வது மற்றும் கழிவுகளை முறையாக அகற்றுவது குறித்து காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன் தலைமை தாங்கி பேசியதாவது:- மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அதற்கான உரிமம் வழங்கப்பட உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் மட்–டுமே. உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டிடங்களில் இருந்து மனிதக்கழிவுகள் மற்றும் கழிவுநீரை சேகரித்துக்கொண்டு செல்வது விதிகளுக்கு முரணானது. உரிமை பெற்றவரின் வாகனத்தில் மட்டுமே கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும்.

    மேலும் உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி, ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், அந்தக்கருவி செயல்படுவதையும், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகளை அனுப்புவதையும் உறுதி செய்யவேண்டும். கழிவுநீர் அகற்றும் நேரம், வழி ஆகியவற்றைப் பின்பற்றி குறிப்பிட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    இந்த விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், முதல் முறை குற்றத்திற்கு ரூ.25 ஆயிரமும், 2-வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கப்படுவதோடு உரிமமும் ரத்து செய்யப்படும். எனவே காங்கயம் பகுதிகளில் அகற்றப்படும் கழிவுகளை சென்னிமலை சாலையில் உள்ள நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கழிவு நீரைக்கொட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் எம்.பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ் மற்றும் காங்கயம் பகுதியைச்சேர்ந்த கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள் கலந்துகொண்டனர்.

    ×