என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உமையொரு பாக ஈஸ்வரர் கோவில்"

    • பல ஆண்டுகளாக சிதிலமடைந்த இக்கோவில் பராமரிப்பற்ற நிலையில் இருந்தது.
    • கோவிலில் பராமரிப்பு பணிகளுக்காகவும், கும்பாபிஷேகம் நடத்தவும் பாலாலய நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல சிவகாமியாபுரத்தில் சிவகாமி அம்பாளுடன் காட்சியளிக்கும் உமையொருபாக ஈஸ்வரர் கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    பல ஆண்டுகளாக சிதிலமடைந்த இக்கோவில் பராமரிப்பற்ற நிலையில் இருந்தது. பழுதடைந்த இக்கோவில் புனரமை க்கப்பட்டு, குடமுழுக்கு நடத்த வேண்டும், தினசரி பூஜைகள் நடைபெற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கை யை ஏற்று தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. , அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கோரிக்கை மனு அளித்தார். இதுகுறித்து சட்டமன்றத்திலும் ராஜா எம்.எல்.ஏ. பேசினார்.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலோடு அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் மேல சிவகாமியாபுரத்தில் உள்ள பழுதடைந்த கோவில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெறும் என அறிவித்தார்.

    பல நூற்றாண்டுகளுக்கு மேலாக பராமரிப்பற்று பழுதடைந்த நிலையில் உள்ள இக்கோவிலில் பராமரிப்பு பணிகளுக்காகவும், கும்பாபிஷேகம் நடத்தவும் பாலாலய நிகழ்ச்சி நடந்தது.

    இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த கோவிலை புனரமைக்கும் பணிக்கு உத்த ரவிட்ட முதல்-அமைச்சருக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும், ராஜா எம்.எல்.ஏ.வுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    ×