என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள எல்லை"

    • கேரளாவில் விலை உயர்வு காரணமாக எரிபொருள் நிரப்பவும் ஏராளமான வாகனங்கள் வருகிறது.
    • போக்குவரத்து நெரிசலால் பஸ்களும் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை.

    செங்கோட்டை:

    அண்டை மாநிலமான கேரளாவிற்கு தென்காசி மாவட்டம் செங்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள இடங்களுக்கு தொழில்நுட்ப வேலைக்கு பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மூலமாக ஆயிரக்க ணக்கான தொழிலாளர்கள் நாள்தோறும் செல்கின்றனர். அவ்வாறு பணிக்கு செல்வோர் அதிகாலையில் 5 மணியில் இருந்து 8 மணிக்குள் செல்ல வேண்டி உள்ளது.

    மேலும் அண்டை மாநில தலைநகர் திருவனந்தபுரம் மற்றும் புனலூர், தென்மலை, அடூர், அஞ்சல், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காகவும், பிற காரணங்க ளுக்காகவும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் துரிதமாக கேரளா செல்லவும் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் டீசல், பெட்ரோல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தின் எல்லையில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவும் ஏராளமான வாகனங்கள் கடந்த சில வாரங்களாக அதிக அளவில் வருகிறது.

    இதனால் எல்லை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. பஸ்களும் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது. அவர்களுடைய வாழ்வா தாரம் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க புளியரை சோதனை சாவடியில் இருந்து தமிழக-கேரள எல்லை வரை 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து காவலர்களை ரோந்து வரச்செய்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×