search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது ". புகழாரம்"

    • நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
    • எத்தப்பன் நகர் பகுதியில் வசிக்கும் பட்டா இல்லாத 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆ.ராசா எம்.பி வழங்கினார்.

    மேட்டுப்பாளையம்,

    காரமடை நகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு சிவன்புரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி காமிராக்கள் இயக்கம், ரூ.25 லட்சம் மதிப்பில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தில் ஒருங்கிணைந்த சமுதாய கூடம் அமைக்கும் பணியை ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்.தொடர்ந்து 13 வது வார்டு புருசோத்தமன் நகரில் பசுமைப்பூங்கா அமைக்கும் பணி உள்ளிட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்ட பணிகளையும் , நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    பின்னர் எத்தப்பன் நகர் பகுதியில் வசிக்கும் பட்டா இல்லாத 46 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களையும் பெற்று கொண்டார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார். சொல்வதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்பவர் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.கொரோனா காலத்தில் தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி என சொல்லாததையும் நிறை வேற்றியுள்ளார்.

    தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் இயங்க வேண்டும் என்பதற்காக பல கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியுள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, காரமடை நகர மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட அவைத்தலைவர் புரு ஷோத்தமன், முன்னாள் எம்.எல்.ஏ பா.அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், காரமடை நகரக்கழகச் செயலாளர் வெங்கடேஷ், 2-வது வார்டு உறுப்பினர் குருபி ரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே காரமடை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர்களுடன் நீலகிரி எம்.பி. ஆ.ராசா குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    ×