என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி"
- கொரோனா காலகட்டத்தில் மதுரையில் யாசகம் மேற்கொண்டு அதில் சேர்ந்த பணத்தில் ஏராளமான பேருக்கு உதவி செய்தேன்.
- தற்போது என்னிடமிருக்கும் ரூ. 10 ஆயிரத்தை முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன்.
- தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சென்று யாசகம் எடுத்து அதன் மூலம் சேரும் பணத்தில் என்னால் முடிந்த உதவியை செய்வேன்.
ஈரோடு, ஏப். 17-
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டியன்(73) என்ற முதியவர் கையில் ரூ. 10,000 பணத்துடன் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்குவதற்காக இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
இதுகுறித்து முதியவர் பூல் பாண்டியன் கூறியதாவது:-
எனது ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங் கிணறு பகுதி ஆகும். எனக்கு சிறுவயதிலிருந்தே பொது சேவையில் ஈடுபடுவது, பிறருக்கு உதவி செய்வது மிகவும் பிடிக்கும். 1980 ஆம் ஆண்டு பிழைப்பிற்காக மும்பை சென்றேன். அங்கு ஒரு அயன் கடையில் வேலை பார்த்தேன். பின்னர் அந்த வேலை ஒத்து வராததால் வேலையை விட்டு விட்டு அங்கு சிறு ஆண்டுகள் யாசகம் மேற்கொண்டேன்.
அதன் பின்னர் 2010-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்தேன். கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பாபநாசம் போன்ற பல்வேறு பகுதிகளில் யாசகம் எடுத்தேன். அதில் சேர்ந்த பணத்தில் என்னால் முடிந்த உதவி செய்ய முடிவு செய்து ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவினேன்.
இதேபோல் கொரோனா காலகட்டத்தில் மதுரையில் யாசகம் மேற்கொண்டு அதில் சேர்ந்த பணத்தில் ஏராளமான பேருக்கு உதவி செய்தேன். இதுவரை யாசகம் மூலம் சேர்ந்த பணத்தில் ரூ. 55 லட்சத்தை நிதி உதவியாக வழங்கி உள்ளேன். தமிழ்நாட்டில் இதுவரை 400 அரசு பள்ளிகளுக்கு சேர், மேஜைகள், ஆர்.ஓ. வாட்டர் போன்ற வசதிகள் செய்து கொடுத்துள்ளேன்.
தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு முதல் முதலாக வந்துள்ளேன். தற்போது என்னிடமிருக்கும் ரூ. 10 ஆயிரத்தை முதல் - அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளேன். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சென்று யாசகம் எடுத்து அதன் மூலம் சேரும் பணத்தில் என்னால் முடிந்த உதவியை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்