என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டுகள்"

    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சகம் இன்று விளக்கம அளிக்கவுள்ளது

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

    இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியது.

    இன்று காலை 10 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதலில் இந்திய விமானப்படையினர் தங்களது அதிநவீன ரபேல் போர் விமானங்களை பயன்படுத்தி உள்ளனர். ரபேல் விமானத்தில் இருந்து ஸ்கால்ப் ஏவுகணைகள் மூலம் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. பொதுவாக ரபேல் விமானங்கள் தொலைதூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை.

    இந்த விமானங்கள் 400 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஸ்கால்ப் ஏவுகணைகளையும் கொண்டுள்ளது. இந்த ஸ்கால்ப் ஏவுகணைகள் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டவை.

    இந்த ஏவுகணைகள் புயல் நிழல் (ஸ்டார்ம் ஷேடோ) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏவுகணையின் நீளம் 5.1 மீட்டர் மற்றும் விட்டம் 630 மில்லி மீட்டர் ஆகும். 1,300 கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணை 250 முதல் 400 கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.

    மேலும் 400 கிலோ வெடி பொருட்களையும் கொண்டு செல்லும் இந்த ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தும் போது பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இந்த ஏவுகணை ஒன்றின் விலை ரூ.21 கோடியாகும்.

    இது இன்டர்ஷியல் நேவிகேசன், ஜி.பி.எஸ். மற்றும் டெரெய்ன் ரெபரன்ஸ் நேவிகேசன் ஆகியவற்றை பயன்படுத்தி வழிநடத்தப்படுகிறது. இதன் மூலம் இலக்கை தானே அடையாளம் கண்டு துல்லியமாக தாக்க முடியும். எனவே தான் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில் இந்திய விமானப்படை விமானங்கள் இந்திய வான்வெளியில் இருந்தே தாக்குதலை நடத்தி உள்ளது.

    இதே போல பாகிஸ்தான் மீதான தாக்குதலில் பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பான ஹேமர் என்ற ஸ்மார்ட் குண்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.

    ஹேமர் என்பது ஏவுதள உயரத்தை பொறுத்து 50 முதல் 70 கிலோ மீட்டர் வரம்பில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஒரு துல்லியமான வழிகாட்டப்பட்ட ஸ்டாண்ட் அப் வெடிமருந்து ஆகும். ஆர்மென்ட் ஏர்-சோல் மாடுலர் என்றும் அழைக்கப்படுகிறது.

    இது குறைந்த உயரத்தில் இருந்து தாக்குதல் நடத்தவும், ஆழமான தாக்குதல் நடவடிக்கைகள் என இரண்டிலும் சிறந்து விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2007-ம் ஆண்டில் பிரான்ஸ் விமானப்படை மற்றும் கடற்படை விமான போக்குவரத்து பிரிவில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் உக்ரைன் நாட்டிற்கும் வழங்கப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியா ஹேமர் குண்டுகளை வாங்கி உள்ளது. இது அனைத்து வானிலை நிலைகளிலும் முழுமையாக செயல்படும். இந்த குண்டுகளை டசால்ட், ரபேல், மிராஜ்-2000டி, எப்16, தேஜாஸ் மற்றும் மிக்-29 உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களில் பயன்படுத்த முடியும். வெவ்வேறு தேவைகளுக்கு ஹேமர் வெடி மருந்துகள் பல்வேறு அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    இந்த குண்டுகள் 125 கிலோ, 250 கிலோ, 500 கிலோ மற்றும் 1000 கிலோ ஆகிய அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த குண்டுகள் மூலம் ஆபரேஷன் சிந்தூரின் போது பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் தாக்கப்பட்டு உள்ளன.

    • போலீஸ் வாகன சோதனையில் 2 துப்பாக்கிகள்-பால்ரஸ் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பறவைகளை வேட்டையாடுவதற்காக கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-கால்பிரவு 4 வழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கி டமான மினி சரக்கு வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த வாக னத்தில் இருந்து 5 பேர் இறங்கினர். போலீசார் வாகனத்தை சோதனை செய்தபோது அதில் உரிமம் இல்லாத 2 ஒற்றைக் குழல் துப்பாக்கி கள், 50 கிராம் பால்ரஸ் குண்டுகள், 50 கிராம் ரவை தூள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அந்த வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .

    வாகனத்தில் வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன், மோகன்ராஜ், ரவிக்குமார், நடராஜன், அஜித் குமார், ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தினர் .

    விவசாய நிலங்களை அழிக்கும் விலங்கு கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதற்காக இந்த துப்பாக்கிகள் கொண்டு வரப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயங்கரவாத தடுப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
    • துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல கும்பலின் தலைவன் பெரும்பாவூர் அனஸ். கொச்சி பியூட்டிபார்லர் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் மீது மேலும் பல வழக்குகள் இருக்கின்றன. இவருடைய கூட்டாளிகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அனசின் கூட்டாளியான எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள மஞ்சலி கொச்சுகுன்றும்புரம் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 4 துப்பாக்கிகள், 2 கத்திகள், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 25 குண்டுகள் இருந்தன.

    அவற்றை சோதனையில் ஈடுபட்ட பயங்கரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ரியாசின் வீட்டில் இருந்து ரூ8.83 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து ரியாசை போலீசார் கைது செய்தனர். ரியாசின் வீட்டில் கடந்த 8 ஆண்களுக்கு முன்பு இதேபோல் பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.

    இந்நிலையில் தற்போதும் அவர் துப்பாக்கிகளுடன் சிக்கியிருக்கிறார். அவர் தனது வீட்டில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கிவைத்திருந்தது தொடர்பாக அவரிடம் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று அனசின் மற்றொரு கூட்டாளியான அல்தாப் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ரிவால்வர் கேஸ், கைவிலங்கு மற்றும் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அனசின் நெருங்கிய கூட்டாளியான பெரும்பாவூரை சேர்ந்த ஷாஜி பாப்பன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    மேலும் அனசுடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் கோவை மாவட்டம் ஆனைமலையில் ஒருவரின் வீடு, மேட்டுப்பாளையத்தில் ஒருவரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் பயங்கரவாத தடுப்பு படையினர் அந்த மாவட்ட போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தி உள்ளனர்.

    பயங்கரவாத தடுப்பு படையினரின் அதிரடி சோதனையில துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×