என் மலர்
நீங்கள் தேடியது "கண்ணிவெடி"
- சத்தீஸ்கர் மாநிலத்தை விட்டு வெளியேறிய மாவோயிஸ்டு கும்பல் தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் பதுங்கி உள்ளனர்.
- அப்பாவி பொதுமக்கள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி:
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் மீது அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் மாவோயிஸ்டு தலைவர்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.
இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தை விட்டு வெளியேறிய மாவோயிஸ்டு கும்பல் தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் பதுங்கி உள்ளனர்.
பத்ராத்திரி, கொத்த குடேம் மற்றும் முலுகு மாவட்டங்களில் சத்தீஸ்கர் தெலுங்கானா எல்லையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மாவோயிஸ்டுகள் பெயரில் பரபரப்பு கடிதம் ஒன்று வந்து வெளியாகி உள்ளது.
அதில் ஆபரேஷன் காகர் என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம்.
இதற்காக மலைப்பகுதிகளை சுற்றிலும் கண்ணி வெடிகுண்டுகள் பதுக்கி வைத்துள்ளோம். அப்பாவி பொதுமக்கள் யாரும் இந்த பகுதிக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த கடிதம் அந்த பகுதி கிராமங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் கூறுகையில்:-
தெலுங்கானா சத்தீஸ்கர் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. வெடிகுண்டு செயலிழப்பு குழுக்களுடன் மலைப்பகுதிகளில் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. எல்லையோர கிராமங்களில் உள்ள மக்கள் கவலைப்பட வேண்டாம். வெடி குண்டுகள் இருப்பது குறித்து அறிகுறிகள் தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
- முந்திரி தோப்பில் காட்டுப்பன்றி மற்றும் நரி போன்ற விலங்குகளை பிடிப்பதற்காக சில மர்ம நபர்கள் மண்ணில் அங்காங்கே கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருந்தனர்.
- மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் 4 பேரும் காலை வைத்தனர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான முந்திரிதோப்பு உள்ளது.
இங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 60), இளையகுமார் (30), மதுரை பாண்டியன் (21), சிறுவன் ரகு (13) உள்ளிட்ட 4 பேரும் முந்திரிக்கொட்டை பொறுக்கும் வேலைக்கு சென்றனர்.
இந்த முந்திரி தோப்பில் காட்டுப்பன்றி மற்றும் நரி போன்ற விலங்குகளை பிடிப்பதற்காக சில மர்ம நபர்கள் மண்ணில் அங்காங்கே கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருந்தனர். இதனை அறியாத 4 பேரும் முந்திரி தோப்பில் கீழே விழுந்து கிடந்த முந்திரிகளை பொறுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் 4 பேரும் காலை வைத்தனர். இதில் கண்ணிவெடி வெடித்து 4 பேரும் தனித்தனியே தூக்கி வீசப்பட்டனர். இதில் முகம், கை, கால், மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரங்கநாதனுக்கு ஒரு கால் துண்டானது.
பலத்த சத்தத்தை கேட்டு அங்கு சென்ற பிற தொழிலாளர்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ரங்கநாதன் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும், மதுரை பாண்டியன் விருத்தாசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விவசாய நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் முந்திரிதோப்பில் கண்ணி வெடி புதைத்து வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
முந்திரி தோப்பில் கண்ணிவெடி வெடித்து ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.