என் மலர்
நீங்கள் தேடியது "வேலை நேரம்"
- சம்பல்பூரில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 104 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.
- நேற்று முன்தினம் அங்கு அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெப்பம் பதிவானது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, அங்குள்ள சம்பல்பூர் மாவட்டத்தில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 104 டிகிரி அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. நேற்று முன்தினம் அங்கு அதிகபட்சமாக 107 டிகிரி வரை பதிவானது என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.
எனவே சம்பல்பூர் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில், அரசு அலுவலர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி வரை காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை (வழக்கமான அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) உணவு இடைவேளையின்றி செயல்படும் என அந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
- அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை என அமைச்சர் பேச்சு
- சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
சென்னை:
தமிழகத்தில் தொழிலாளர்களின் வேலை நேர சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஏதுவாக சட்டசபையில் இன்று சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்படும், அதற்கு உரிய சம்பளம் வழங்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மசோதாவை அமைச்சர் சி.வி.கணேசன் மசோதாவை தாக்கல் செய்து பேசும்போது, 8 மணி நேர வேலை, வார விடுமுறை, கூடுதல் ஊதியம் என்ற ஷரத்துகளில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார். தொழிற்சாலை நெகிழ்வுத்தன்மைக்காகவே மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் அதற்கு எதிராக அரசு இருக்காது, அனைத்து நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை, தொழிலாளர்கள் விரும்பும் தொழிற்சாலைகளில் மட்டுமே ஆய்வு செய்து இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கம்யூனிஸ்ட், பாமக, பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அத்துடன் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக தோழமைக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
8 மணி நேரம் என்பதை இந்த சட்ட மசோதா நீர்த்துப்போகச் செய்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி தெரிவித்தார். மசோதா மூலம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என மதிமுக உறுப்பினர் சதன் திருமலைக்குமார் பேசினார்.
சட்ட மசோதாவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார். இந்த வேலை நேர சீர்திருத்த மசோதாவை ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என விசிக எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் கோரிக்கை விடுத்தார்.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரமேஷ் வங்கி வேலை நேரம் முடிந்த பிறகு வங்கிக்கு வந்து பணம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.
- பஸ்சில் ஊருக்கு செல்வதற்காக அசகளத்தூர்பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி பூங்குழலி (வயது 37) இவர் தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அசகளத்தூர் பகுதியைச் சேர்ந்த குரு மகன் ரமேஷ் (25) வங்கி வேலை நேரம் முடிந்த பிறகு வங்கிக்கு வந்து பணம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி அதிகாரிகள் வங்கி வேலை நேரம் முடிந்து விட்டது. நாளைக்கு வந்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.
பின்பு வேலை நேரம் முடிந்து வங்கி துணை மேலாளர் பூங்குழலி மற்றும் கல்விக்கரசி ஆகியோர் பஸ்சில் ஊருக்கு செல்வதற்காக அசகளத்தூர்பஸ் நிலையத்திற்கு நடந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் இவர்களை வழிமறித்த ரமேஷ் இருவரையும் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து துணை மேலாளர் பூங்குழலி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.
- கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961 இல் அம்மாநில அரசு திருத்தும் கொண்டு வர பரிசீலனை செய்து வருகிறது.
- IT/ITeS/BPO துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
தினமும் 14 மணி நேர வேலை: அடுத்த சர்ச்சைக்கு ரெடியான கர்நாடகா.. கொந்தளிக்கும் ஊழியர்கள்கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961 இல் அம்மாநில அரசு திருத்தும் கொண்டு வர பரிசீலனை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் அந்த சட்டத்திருத்தத்தில் 14 மணி நேர வேலை என்பதையும் கொண்டுவரவேண்டும் என்று ஐ.டி நிறுவனங்கள் முயற்சி செய்து வருகிறது. தற்போதுள்ள, தொழிலாளர் சட்டங்களின்படி அதிகபட்ச வேலை நேரம் என்பது 12 மணிநேரத்தை தாண்டக்கூடாது. ஆனால் நிறுவனங்கள் வைத்துள்ள முன்மொழிவில், 'IT/ITeS/BPO துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்திற்கு மேல் 14 மணி நேரம் வரை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி நிறுவனங்களின் இந்த முன்மொழிவை கர்நாடக அரசு பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிகின்றன. இந்நிலையில் இதற்கு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கங்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு நாளைக்கு 14 மணி நேர வேலை என்பது மனிதாபிமானமற்றது என்றும் ஊழியர்களின் உடல் மற்றும் மன நலனை கடுமையாக கூடியது என்றும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் கர்நாடகா அரசு மாநிலத்தில் உள்ள நிறுவனங்களில் கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கே அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
- உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.
- உலகின் டாப் இடத்தில் வர வேண்டுமேன்றால், வாரத்திற்கு நீங்கள் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்தியாவில் ஒரு தொழிலாளி சராசரியாக ஒவ்வொரு வாரமும் 46.7 மணி நேரம் வேலை செய்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. சீனா 46.1 மணி நேரம், பிரேசில் 39 மணி நேரம், அமெரிக்கா 38 மணி நேரம், ஜப்பான் 36.6 மணி நேரம் வேலை செய்வதாக தெரியவந்துள்ளது.
முன்னதாக, L&T சேர்மன் எஸ்.என். சுப்ரமணியன் "உங்களை (பயணியாளர்கள்) ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைப்பார்க்க வைக்க என்னால் முடியவில்லை என்று வருத்தப்படுகிறேன். என்னால் ஞாயிற்றுக்கிழமை உங்களை வேலைப்பார்க்க வைக்க முடியும் என்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால், நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலைப் பார்க்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் என்ன லாபம் அடைந்தார்கள்?. வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். உங்களுடைய மனைவியை எவ்வளவு நேரம் வெறித்து பார்க்க முடியும். எவ்வளவு நேரம் மனைவி கணவனின் முகத்தை வெறித்து பார்க்க முடியும்? அலுவலகம் சென்று வேலையை தொடங்குங்கள்.
சீன மக்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலைப் பார்க்கிறார்கள். அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணி நேரம் மட்டுமே வேலைப் பார்க்கிறார்கள். உலகின் டாப் இடத்தில் வர வேண்டுமேன்றால், வாரத்திற்கு நீங்கள் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்துக்கு, தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவீத உயர்வு. தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார் என்று பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.