என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளிமலை"

    • கழிப்பறை ஓய்வெடுக்கும் பகுதி என்று மலைப்பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் அபிவிருத்தி பணிகள் செய்துவந்தனர்.
    • அனுமதி பெறாமல் தொடர்ந்து எவ்வித பணியும் செய்யக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

    கன்னியாகுமரி :

    பத்துகாணி காளி மலையில்சித்திர பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பத்து காணியிலிருந்து காளி மலைக்கு செல்லக்கூடிய பாதை மற்றும் ஊற்றுக்குழி என்ற பகுதியில் கழிப்பறை ஓய்வெடுக்கும் பகுதி என்று மலைப்பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் அபிவிருத்தி பணிகள் செய்துவந்தனர்.

    இத்தகவலை அறிந்து விளவங்கோடு வட்டாட்சியர் குமாரவேல் மற்றும் அருமனை ஆய்வாளர் முருகன் ஆறுகாணி காவலர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அனுமதி இன்றி தொடங்கிய பணியை தடுத்து நிறுத்தியதோடு அனுமதிபெறாமல் தொடர்ந்து எவ்வித பணியும் செய்யக்கூடாது என்றுஎச்சரித்துள்ளனர். அனுமதி இல்லாமல் பணி தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மதுரை ஆதீனம் இன்று தொடங்கி வைத்தார்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்ட எல்லையான பத்துகாணி பகுதியில் உள்ள காளிமலையில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் துர்க்காஷ்டமி திருவிழா இன்று தொடங்கி 6 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு சமுத்திரகிரி ரதயாத்திரை இன்று காலை தொடங்கியது.

    முன்னதாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு இருமுடி கட்டு மற்றும் புனித நீர் குடங்களில் நிரப்பும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கலையரங்கம் முன்பு உள்ள சன்னதி தெருவில் இந்த சமுத்திரகிரி ரத யாத்திரை தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். காளிமலை டிரஸ்ட் முன்னாள் தலைவர் சலீம்குமார் முன்னிலை வகித்தார். சின்மயா மிஷின் சுவாமி நிஜானந்தா ஆசியுரை வழங்கினார். விழாவின் தொடக்கமாக காளிமலை டிரஸ்ட் தலைவர் ராஜேந்திரன் விழா கொடியை குமரி கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் ராஜாராமிடம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் 293-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சமுத்திரகிரி ரதயாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுவாமிதோப்பு குரு சிவசந்திரன், இலங்கை அறங்காவலர் டாக்டர் செந்தில்வேள், இந்து முன்னணி மாநில பேச்சாளர் வக்கீல் எஸ்.பி.அசோகன், மாவட்ட பொருளாளர் திரவியம், மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த ரத யாத்திரைக்கு முன்னால் ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் ராஜாராம் விழா கொடியேந்தி சென்றார். விழா குழு அமைப்பாளர் கதிரேசன் ரதயாத்திரையை ஒருங்கிணைத்துக்கொண்டு சென்றார். இந்த ரத்தத்தில் பத்திரகாளியம்மன் விக்ரகம் பல வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. ரதத்துக்கு பின்னால் பெண் பக்தர்கள் தலையில் இருமுடி சுமந்து கொண்டும், ஆண் பக்தர்கள் தலையில் புனித நீர் குடம் தாங்கிய படியும் ஊர்வலமாக சென்றனர். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த சமுத்திரகிரி ரத யாத்திரை விவேகானந்தபுரம், கொட்டாரம், சுசீந்திரம், கோட்டார், நாகர்கோவில், மீனாட்சிபுரம், வடசேரி, தோட்டியோடு, வில்லுக்குறி, தக்கலை, மார்த்தாண்டம், உண்ணாமலை கடை, ஆற்றூர், சிதறால் கடையாலுமூடு, வழியாக 22-ந்தேதி பத்துகாணி பகுதியில் உள்ள காளிமலையை சென்றடைகிறது.

    ×