என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்"
- துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார்.
- திருவள்ளுவனின் பதவி காலம் வரும் டிசம்பர் 12ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நடவடிக்கை.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 40 பணியிடங்களை நிரப்ப பணம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதை அடுத்து, உரிய தகுதி இல்லாத 40 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டது.
முறையான பதிலை தராமல் காலம் கடத்திய திருவள்ளுவனின் பதவி காலம் வரும் டிசம்பர் 12ம் தேதி நிறைவடைய உள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புகார் தொடர்பாக 2019ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 9ஆயிரத்து 670 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.
- கவர்னர் உறுதிமொழி கூற பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று 13-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆராய்ச்சி படிப்பு, முதுகலை, இளநிலை, தொலைநிலைக்கல்வி ஆகிய பிரிவுகளில் கடந்த 2019-20, 2020-21, 2021-22, 2022-23 ஆகிய 4 ஆண்டுகளில் படித்தவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு கவர்னரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, பி.எச்டி படிப்பு முடித்த 302 பேருக்கும், 490 எம்.பில், 119 முதுகலை மாணவர்கள், இளங்கலை மாணவர்கள், 257 பி.எட் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 9ஆயிரத்து 670 பேருக்கு பட்டங்கள் வழங்கினார். மொத்தம் 10 ஆயிரத்து 840 பேருக்கு பட்டங்கள் வழங்கினார்.
அப்போது கவர்னர் உறுதிமொழி கூற பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் அளிக்கப்பட்ட பட்டங்களுக்கு கவர்னர் அதிகாரம் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் எம்.ஜி.ஆர். பல்லைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதாசேஷய்யன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்