search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில்"

    • சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நாளை கொடியேற்றப்பட்டு தொடங்குகிறது.
    • பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது.

    பவானி:

    பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நாளை (புதன்கிழமை) காலை சங்கமேஸ்வரர் சன்னதியில் கொடியேற்றப்பட்டு தொடங்குகிறது. இதை தொடர்ந்து நாளை மாலை பஞ்சமூர்த்தி கேடயம் புறப்பாடு நடக்கிறது.

    இதை தொடர்ந்து வரும் 27-ந் தேதி ஆதிகேசவ பெருமாள் சன்னதியில் கொடியேற்றப்படுகிறது. இதையடுத்து அபிஷேக ஆராதனையும், அன்று இரவு சேஷ வாகனம் மற்றும் பூத வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது. 28-ந் தேதி மற்றும் 29-ந் தேதி காலை அபிஷேக ஆராதனை மற்றும் மாலை சாமி புறப்பாடு நடக்கிறது.

    விழாவையொட்டி வரும் 30-ந் தேதி காலை அபிஷேக ஆராதனையும், மாலை ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு மற்றும் 63 நாயன்மார்கள் புறப்பாடு நிகழ்ச்சியும், அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி மற்றும் 2-ந் தேதி அபிஷேக ஆராதனை மற்றும் சாமி புறப்பாடும் நடக்கிறது.

    இதை தொடர்ந்து வரும் 3-ந் தேதி காலை ஸ்ரீதேவி, பூ தேவி சமேத ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாணம் மற்றும் திருத்தேர் விழாவும், அன்று மாலை சங்கமேஸ்வரர் புறப்பாடும், 4-ந் தேதி காலை வேத நாயகி அம்மன் உடனமர் சங்கமேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும் திருத்தேர் விழாவும், அன்று மாலை மகா அபிஷேகமும் நடக்கிறது.

    வரும் 5-ந் தேதி காலை அபிஷேக ஆராதனையும் அன்று மாலை பரி வேட்டை சாமி புறப்பாடு, 6-ந் தேதி காலை தீர்த்தவாரியும், அன்று மாலை பிஷாண்டவர் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதைதொடர்ந்து வரும் 7-ந் தேதி காலை நடராஜர் அபிஷேக ஆராதனை புறப்பாடும், அன்று மாலை மஞ்சள் நீர் விழாவும், சாமி புறப்பாடும், அவரோஹணம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ×