search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்மாற்றியை"

    • நாகூரில் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்த மின்மாற்றியை அகற்ற வேண்டும்
    • நாகூர் பகுதியில் இருந்த இரு மின்மாற்றிகள் ஒரே மின்மாற்றியாக மாற்றி அமைக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்கா அலங்கார வாசலில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக இருந்த மின்மாற்றியை அகற்றி அப்பகுதியை சீர்செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுடன் அங்கு ஆய்வு செய்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், விரைவில் மின்மாற்றி அகற்றப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

    ஆனால் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களின் காரணமாக அப்பணி நடைபெறவில்லை.

    இதற்கிடையில், சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஷா நவாஸ் எம்.எல்.ஏ இது தொடர்பாக கோரிக்கை விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர், தஞ்சாவூரில் இருந்து கூடுதல் திறன் மிக்க புதிய மின்மாற்றியை அனுப்பிவைக்க உத்தரவிட்டார்.

    நாகூர் பகுதியில் இருந்த இரு மின்மாற்றிகள் ஒரே மின்மாற்றியாக மாற்றி அமைக்கப்பட்டது.

    மேலும், தர்கா அலங்கார வாசலில் ருந்த மின்மாற்றியும் அகற்றப்பட்டது.

    இதனால் அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    ×