என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gifts உணவுகள்"
- சிராங்குடி அரசு பள்ளியில் பாரம்பரிய உணவு வகை திருவிழா நடைபெற்றது.
- திருவிழாவில் கேப்ப கம்பு, சோளம், கேழ்வரகு, மோர் உள்ளிட்ட உணவுகள் வைக்கப்பட்டன.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிராங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய உணவு வகை திருவிழா நடைபெற்றது.
இந்த உணவு வகை திருவிழாவில் கேப்ப கம்பு, சோளம், கேழ்வரகு, மோர் உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இந்த விழாவிற்கு சிராங்குடி தலைமையாசிரியர் ஞானம்மாள் தலைமை ஏற்றார்.
ஆசிரியர் டேனியல் வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தி னராக மூத்தாக்குறிச்சி தலைமையாசிரியர் செல்வராணி, பி.டி.ஏ ஆசிரியர் ரெத்தினப் பிரியா , (பாத்திமா மரியம் பள்ளி) தனியார் பள்ளி ஆசிரியர் சுகன்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் உணவு வகை மாற்றம் பற்றியும் உணவு வகை மாற்றத்தினால் மனிதனின் ஆயுள் காலம் குறைவது பற்றியும் முக்கியமானவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் முக்கியமான வர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
இறுதியாக சிறந்தவர்களாக உணவு திருவிழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மற்றும் ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டது.
இதில் ஆசிரியர் கண்மணி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.