என் மலர்
நீங்கள் தேடியது "நண்பரை அடித்து கொன்ற"
- மாரிமுத்து ஒரு குடோன் அருகே பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
- விசாரணையில் மாரிமுத்துவை கொலை செய்ததை மோகன் ஒப்புக்கொண்டார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சாணார்பதி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (37). தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மாரிமுத்து மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர் சத்தி-கோவை ேராட்டில் உள்ள ஒரு குடோன் அருகே பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.
இதுபற்றி தெரிய வந்த தும் சத்தியமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
பின்னர் மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது கடைசியாக சத்தியமங்கலம் கொமாரபாளையத்தை சேர்ந்த மோகன் (38) என்பவரிடம் பேசியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மோகனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.
மேலும் கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவும் இவரும் நண்பர்கள் என்றும் தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாரிமுத்துவை கொலை செய்ததை மோகன் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் மோகனை கைது செய்தனர்.
மேலும் மாரிமுத்துவை கொலை செய்தது ஏன்? என்று வாக்குமூலமும் அளித்தார். வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
நானும் மாரிமுத்தும் நண்பர்கள். அவரது மனைவி சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இதனால் நாங்கள் நட்பு ரீதியாக பழகி வந்ேதாம்.
ஆனால் மாரிமுத்து என் மீது சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தவறாக பேசி வந்தார்.
சம்பவத்தன்று என்னை போனில் அழைத்தார். நான் சத்தி-கோவை ரோட்டில் உள்ள ஒரு குடோன் அருகே சென்றேன். அப்போது மாரிமுத்து என்னிடம் பணம் கேட்டார்.
மேலும் அவரது மனைவியுடன் பழகுவதை சந்தேகப்பட்டு பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது காரில் வைத்திருந்த இரும்பை வைத்து மாரிமுத்துவை தாக்கினேன்.
இதில் பலத்த காயம் அடைந்த மாரிமுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து இறந்தார். இதையடுத்து நான் அங்கிருந்து தப்பி சென்றேன்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இதையடுத்து போலீசார் மோகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் சிறையில் அடைத்தனர்.