search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிசய பனை"

    • பனை மரத்தின் மையப்பகுதியில் இருந்து 25க்கும் மேற்பட்ட கிளைகள் பிரிந்து காணப்படுகின்றன.
    • தோட்டத்திற்கு வருபவர்கள் பனைமரத்தை அதிசயமாக பார்த்து செல்வதாக அகிலன் தெரிவித்தார்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த பழைய எருமை வெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அகிலன் (54), விவசாயி. இவருடைய 7 ஏக்கர் நிலத்தில் 400 பனை மரம், தென்னை மரம் வளர்த்து பாதுகாத்து வருகிறார். இவரது தோட்டத்தில் 25க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட அதிசயமான பனை மரம் ஒன்று காணப்படுகிறது. இந்த பனை மரத்தின் உச்சியில் 25க்கும் மேற்பட்ட கிளைகள் பிரிந்து காணப்படுகின்றன.

    இந்த பனை மரத்திற்கு பத்திரகாளி பனை மரம் எனவும், கும்பிடு பனைமரம் எனவும் பெயர் சூட்டி தோட்டத்திற்கு செல்லும்போது வணங்கி விட்டு செல்வதாக கூறுகிறார் அகிலன். 25 கிளைகள் கொண்ட பனை மரம் அரிதாக காணப்படுவதாகவும், தனது தோட்டத்திற்கு வருபவர்கள் இந்த பனை மரத்தை அதிசயமாக பார்த்து செல்வதாகவும் தெரிவித்தார்.

    ×