என் மலர்
நீங்கள் தேடியது "பேரிழப்பு"
- ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர்.
- கஜா புயலால் மாமரங்கள் முற்றிலும் சாய்ந்து பேரிழப்பை ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக கடற்கரையோர கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்து வருகின்றனர். புதுப்பள்ளி, தெற்குபொய்கை நல்லூர், பூவைத்தேடி காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரதான தொழிலாக மா சாகுபடி செய்து வருகின்றனர்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் கொடூர தாக்குதலால் லட்சக்கணக்கான மா மரங்கள் சாய்ந்து மரங்கள் முரிந்தும் பேரிழப்பை ஏற்படுத்தியதுகஜா புயலால் சாய்ந்த மரங்கள் 5 பிறகு மீண்டும் துளிர்விட்டும்,புதிய மரங்கள் நடப்பட்டு காய்க்க தொடங்கி உள்ள இப்பகுதிகளில் குறிப்பாக பங்கனப்பள்ளி,ஒட்டு மாங்காய் ,ருமேனியா செந்தூரா, நீளம், காலபாடு உள்ளிட்ட பல்வேறு வகையான மாங்காய் காய்த்து விற்பனைக்கு தயாராக உள்ள நிலையில் இங்கு காய்க்கும் மாங்கனிகளை அதிக சுவை இருப்பதால் இம் மாங்காய்களை கேரளா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் குளிர்பான நிறுவனங்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு தனியார் நிறுவனங்கள் மாம்பழத்தை கொள்முதல் செய்யாததால் கடந்த ஆண்டு 35 ரூபாய் விலை போன ருமேனியா கிலோ 7 ரூபாய்க்கும் 50 ரூபாய் விற்ற பங்கனப்பள்ளி 20 ரூபாய்க்கும் 40, 50 ரூபாய் விலை போன ஒட்டு மாங்காய் 12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால் மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாங்கனிகள் மரத்திலிருந்து வீணாவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் இப்பகுதியில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைத்து மாங்காய்களை அரசே கொள்முதல் செய்து உரிய விலையை தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.