என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கறுப்புக்கொடி"
- 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடி டோல்கேட் பகுதியில் இன்று டிரைவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- நமது உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் சங்கம் உட்பட 10க்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.
கருப்பூர்:
ஆன்லைன் வழக்கு பதிவு முறையை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடி டோல்கேட் பகுதியில் இன்று டிரைவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுனர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தொழிற்சங்கம், சிகரம் அனைத்து வாகன ஓட்டுனர் நலச்சங்கம்,
நமது உரிமை அனைத்து வாகன ஓட்டுநர் சங்கம் உட்பட 10க்கு மேற்பட்ட ஓட்டுனர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். டிரைவர்கள் தங்கள் வாகனங்களில் கருப்புக்கொடி கட்டியும், கருப்பு பேட்ச் அணிந்தும் போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார் மாநில கவுரவத் தலைவர் சரவணன், மாவட்ட பொருளாளர் மாதேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
ஆர்ப்பாட்டத்தில் மேட்டூர் நகர தலைவர் தவசியப்பன், ஓமலூர் ஒன்றிய தலைவர் முத்துசாமி, சேலம் மாநகர் தலைவர் கர்ண மூர்த்தி, உட்பட சேலம் மாவட்டத்தில் இருந்து150-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.