search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலை நேரங்களில்"

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குழித்துறை பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

    சுமார் 2 மணி நேரத்திற் கும் மேலாக கொட்டி தீர்த்த மழை காரணமாக அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 62.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடையாமடை, புத்தன் அணை, கன்னிமார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, குலசேகரம், களியல், சுருளோடு பகுதியிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    இதனால் வாழை, தென்னை, அன்னாசி, ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தக்கலை, சரல்விளை, வண்ணான்விளை பகுதியை சேர்ந்த சுஜுன் என்பவரது வீட்டில் மின்னல் தாக்கியதில் வீட்டின் மேல்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினார்கள்.

    தொடர் மழையின் கார ணமாக திற்பரப்பு அருவி யில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கும் வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 36.47 அடி யாக உள்ளது. அணைக்கு 206 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.55 அடியாக உள்ளது. அணைக்கு 86 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 15.8, பூதப்பாண்டி 3.2, களியல் 4.6, கன்னிமார் 6.8, குழித் துறை 62.2, புத்தன்அணை 15, சுருளோடு 7, தக்கலை 20, பாலமோர் 4.2, திற்பரப்பு 5.8, ஆரல்வாய்மொழி 16, கோழிபோர்விளை 38.5, அடையாமடை 24, முள் ளங்கினாவிளை 22.4.

    ×