என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "என்டி ராமாராவ்"
- என்.டி.ராமாவ் 1923-ம் ஆண்டு மே மாதம்28-ந் தேதி ஒரு இந்து விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
- என்டி ராமாராவ் 1982 -ம் ஆண்டு மார்ச் மாதம் ஐதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார்.
என்.டி .ராமராவ் நடிகர் திரைப்பட தயாரிப்பாளர் அரசியல்வாதி என பல துறைகளில் சாதனை படைத்தவர். ஆந்திர பிரதேசத்தின் முதல்-அமைச்சராக 3 முறை பதவி வகித்தார்.
என்.டி.ராமாவ் 1923-ம் ஆண்டு மே மாதம்28-ந் தேதி ஒரு இந்து விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கிருஷ்ணா மாவட்டத்தின் குடிவாடா தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமமான நிம்மகுருவில், இது பிரிட்டிஷ் இந்தியாவின் பழைய மெட்ராஸ் பிரசிடென்சியின் ஒரு பகுதியாக இருந்தது. அவரது மாமா மற்றும் அத்தைக்கு குழந்தை இல்லை. அவர் தனது தந்தைவழி மாமாவுக்கு தத்தெடுக்கப்பட்டார். அவர் முதன்முதலில் அருகிலுள்ள கிராமத்தில் இருந்து வந்த ஒரு ஆசிரியரால் கல்வி கற்றார்.
என்.டி.ஆர்
ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு, குழந்தைகள் பொதுவாக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், குடும்பத்தில் முதல் ஆண் குழந்தை என்ற காரணத்திற்காக, அவரது தந்தை அவரை விஜயவாடாவுக்கு அனுப்பினார். அங்கு அவர் தனது கல்வியைத் தொடர்ந்தார். குண்டூரில் உள்ள ஆந்திர கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தார். 1947-ல், குண்டூர் மாவட்டத்தின் பிரதிபடு என்ற இடத்தில் சப்-ரிஜிஸ்ட்ராராக மெட்ராஸ் சர்வீஸ் கமிஷனில் சேர்ந்தார். பின்னர் ஆந்திர சினிமாவில் நுழைந்தார். ஆந்திர சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் ராமர், கிருஷ்ணர் கதாபாத்திரங்கள் என்றால் இன்றும் நினைவுக்கு வருபவர் என்.டி. ராமராவ்.
'சம்பூர்ண ராமாயணம்' படத்தில் ராமராக என்.டி. ராமராவ் நடித்தார். ராமரின் குணங்களாக வர்ணிக்கப்படும் அமைதியும், சாந்தமும் ராமராக நடித்த என்.டி.ஆரின் முகத்தில் தவழும். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அலட்டிக் கொள்ளாமல் ஆனால், ஆழமாக நடித்திருப்பார். அவரை ராமர் வேடத்தில் மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான் சம்பூர்ண ராமாயணம் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது.
அதேபோல, கிருஷ்ணர் என்றாலும் ராமராவ்தான் கண் முன் நிற்பார். 'மாயா பஜார்', 'கர்ணன்' படங்களில் கிருஷ்ணராகத் தோன்றுவார். இதிகாசப்படி கிருஷ்ணர் கொஞ்சம் எதிரிகளிடம் குறும்புடன் விளையாடுவார். ராமராக நடிக்கும்போது அமைதியும் சாந்தமும் ராமராவின் உணர்ச்சி பாவங்களாக இருந்தது என்றால், கிருஷ்ணராக நடிக்கும்போதோ அதற்கேற்ப அவர் முகத்தில் குமிழ் நகையும் குறும்பும் கொப்பளிக்கும்.
என்.டி.ஆர் -எம்.ஜி.ஆர்
தமிழ் திரையுலகின் சாகாவரம் பெற்ற திரைப் பாடல்களில் ஒன்றான 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற 'உள்ளத்தில் நல்ல உள்ளம்..' பாடலில், வயோதிகராக வந்து அசத்துவார் ராமராவ். கர்ணனனாக நடிக்கும் சிவாஜி கணேசனிடம் தர்மத்தை தானமாகப் பெற முயலும்போது, கர்ணனின் நிலையைப் பார்த்து பரிதாபப் பார்வை பார்ப்பார். அதேநேரம், அவனுடைய தர்மப் பலன்கள் அனைத்தையும் பெற்றால்தான் கர்ணன் உயிர்போகும் என்பதால் தானத்தைப் பெற்றுவிடுவதில் காட்டும் முனைப்பு என்று நடிப்பில் என்.டி. ராமராவ் கொடி நாட்டியிருப்பார்.
ராமராவ் நடித்து 1951-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'பாதாள பைரவி' திரைப்படத்தை இந்த தலைமுறை மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறையும் ரசிக்கும். என்டி ராமராவ் 1982 -ம் ஆண்டு மார்ச் மாதம் ஐதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். தகுதியற்ற ஆட்சியில் இருந்து ஆந்திராவை விடுவிப்ப தற்கான வரலாற்று தேவையின் அடிப்படையில் இந்த கட்சி ஆரம்பிக்க ப்பட்டதாக அவர் கூறினார். ஊழலில் ஈடுபடாத படித்த வேட்பா ளர்களை நிறுத்த முடிவு செய்தார்.
இது அந்த நேரத்தில் ஒரு புதுமையான அரசியல் கருத்தாக இருந்தது. எம்ஜிஆர் பாணியில் திறந்த வேனில் சென்று ஆந்திரா முழுவதும் 75,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். தெலுங்கு மக்களின் சுயமரியாதை என்ற நோக்கத்துடன் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தது. இதனால் 1983-ம் ஆண்டு ஆந்திர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் 294 இடங்களில் 202 இடங்களில் வென்று அவர் முதல் முறையாக முதல் அமைச்சரானார். தொடர்ந்து 3 முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக மக்கள் பணியாற்றினார்.
என்.டி. ராமாராவ் 1996 -ம் ஆண்டு ஜனவரி 18-ந்தேதி ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் 72 வயதில் மாரடைப்பால் காலமானார். அவர் தகனம் செய்யப்பட்டார். அவரது அஸ்தியை அவரது 2-வது மனைவி லட்சுமி பார்வதி எட்டு ஆண்டு களுக்குப் பிறகு, மே 2004 -ல் ஸ்ரீரங்கப்ப ட்டினத்தில் கரைத்தார்.
என்.டி.ஆர் -எம்.ஜி.ஆர் -இந்திரா காந்தி
உயிருடன் இருந்தவரை அந்திர மக்களுக்கு வாழும் கடவுளாகவே விளங்கிய என்.டி.ஆர்., சினிமாவையும் தாண்டி சென்னை மக்களின் தாகம் தணிக்க உதவியவர். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் ராமராவுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரின் பெயரிலும் ராமன் உண்டு. தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர். சூப்பர் ஸ்டார் என்றால் தெலுங்குத் திரையுலகில் என்.டி.ஆர். இருவருமே அரசியலில் ஈடுபட்டு மாநில முதல்-அமைச்சரானவர்கள்.
எம்.ஜி.ஆருக்கும் என்.டி.ராமராவுக்கும் உள்ள நட்பும் நெருக்கமும் நாடறிந்தது. 'எனது குருநாதர் எம்.ஜி.ஆர்.' என்று வெளிப்படையாகவே அறிவித்தவர் ராமராவ்.
ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 1983-ம் ஆண்டு ஜனவரியில் ஆந்திர முதல்-அமைச்சராக என்.டி. ராமராவ் பதவியேற்றார். தன்னிடம் ஆசிபெறுவதற்காக சென்னை வந்த என்.டி.ராமராவுக்கு அவரை கவுரவிக்கும் விதமாக தனது தோட்டத்தில் எம்.ஜி.ஆர். விருந்தளித்தார். அப்படியே சென்னை நகரின் குடிநீர் பற்றாக்குறையையும் அதைத் தீர்க்க ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வரும் யோசனையையும் என்.டி.ராமராவிடம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர் சொன்னால் என்.டி.ஆரிடம் மறுப்பேது? அப்போது உருவானதுதான் கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வரும் 'தெலுங்கு கங்கைத் திட்டம்'. பதவியேற்ற அடுத்த 4 மாதங்களில் 1983,மே 25-ந் தேதி சென்னையில் நடந்த தெலுங்கு கங்கைத் திட்ட தொடக்க விழாவில், திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் பங்கில் முதல் தவணைக்கான காசோலையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மூலம் ராமராவிடம் கொடுக்கச் செய்தார் எம்.ஜி.ஆர். அந்த வகையில் சென்னை நகரின் தாகம் தீர்க்க உதவியிருக்கிறார் நூற்றாண்டு நாயகர் என்.டி. ராமராவ்.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் கடையம் மண்டலம் வேமகிரியில் இன்றும் நாளையும் முன்னாள் முதல் -அமைச்சர் எம் டி ராமராவ் நூற்றாண்டு விழா மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. என்.டி.ஆர் நூற்றாண்டு பிறந்த ஆண்டு என்பதாலும், தெலுங்கு தேசம் கட்சி நிறுவப்பட்டு 41 ஆண்டுகள் ஆனதாலும், மாநாடு வரலாற்றில் இடம்பிடிக்க எல்லாம் தயாராகி விட்டது. இதற்காக 10 ஏக்கரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
வெகு தொலைவில் அமர்ந்திருப்ப வர்களும் நிகழ்வைக் காணும் வகையில் 20 எல்இடி திரைகள் பொருத்த ப்பட்டுள்ளன. நாளை மாலை 15 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் பொதுக் கூட்டம் நடக்கிறது. சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அமர்வதற்காக 4,000 சதுர அடியில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
- ஹீரோவாக உள்ள நிலையில் அவர் உண்மை தெரிந்து பேசினாரா என்பது தெரியவில்லை.
- என்.டி.ஆரின் மரணத்துக்கு காரணமே சந்திரபாபு நாயுடுதான் என்பது அனைவருக்கும் தெரியும்.
திருப்பதி:
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் நுாறாவது பிறந்த நாள் நிகழ்ச்சி, விஜயவாடாவில் நேற்று முன்தினம் நடந்தது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என்.டி.ஆர் மகன் நடிகர் பாலகிருஷ்ணா கலந்துகொண்டனர்.
இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது "சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்கு பார்வைகொண்ட அரசியல் தலைவர். அவரது தொலைநோக்கு பார்வையால், ஐதராபாத் இப்போது ஹைடெக் நகராக மாறியுள்ளது. ஐதராபாத், நியூயார்க் போன்று வளர்ந்துள்ளது" என்றார்.
இந்த பேச்சுக்கு ஆந்திராவில் உள்ள மற்ற கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா கூறியதாவது:-
ரஜினிகாந்த்தின் பேச்சு சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது.
ரஜினிகாந்த் உண்மை அறிந்து பேசினாரா என்று தெரியவில்லை. ரஜினிகாந்த் அனைவரும் விரும்பக்கூடியவர். ஹீரோவாக உள்ள நிலையில் அவர் உண்மை தெரிந்து பேசினாரா என்பது தெரியவில்லை.
தெலுங்கு தேசம் கட்சியின் பஜனைக் கூட்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் சந்திரபாபு எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டை படித்தாரா.
ரஜினிகாந்த் தன் உரையில் "விண்ணுலகில் இருந்து சந்திரபாபு நாயுடு மீது என்.டி.ஆர் ஆசிகளை பொழிகிறார்' என்று குறிப்பிட்டார். என்.டி.ஆரின் மரணத்துக்கு காரணமே சந்திரபாபு நாயுடுதான் என்பது அனைவருக்கும் தெரியும்.
பிரதமராக கூடிய தகுதி கொண்ட என்.டி.ராமராவை சூழ்ச்சி செய்து அவரது பலத்தால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை அவருக்கு எதிராக திசை திருப்பி சட்டப்பேரவையில் இருந்து அழுது கொண்டு என்.டி.ராமராவ் வெளியே வர காரணமாக இருந்தவர் சந்திரபாபு நாயுடு.
அப்போது என்.டி. ராமராவ் பேசுகையில், சந்திரபாபு ஒரு திருடன். ஈரத் துணியை கழுத்தில் போட்டு இறுக்கக்கூடியவன் என பேசினார்.
சந்திரபாபு நாயுடு துரோகம் குறித்து என்.டி. ராமராவ் பேசியது ரஜினிகாந்துக்கு தெரியாதா. அவருக்கு தெரியவில்லை என்றால் என்.டி. ராமராவ் பேசிய சிடி என்னிடம் உள்ளது. அதை அனுப்பி வைக்கிறேன். பார்த்து தெரிந்து கொள்ளட்டும்.
ஐதராபாத் நியூயார்க் நகரை போன்று மாறி இருப்பதற்கு சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு விஷன் காரணம் என கூறியுள்ளார்.
2003-வது ஆண்டுடன் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. அதன்பின்னர், இப்போது 20 ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது ஐதராபாத் நகரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக ஐதராபாத் பகுதியை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடு, அந்த நகரின் வளர்ச்சிக்கு எப்படி காரணமாக இருக்கமுடியும் என்பதை ரஜினிகாந்த் நினைத்து பார்க்க வேண்டும்.
விஷன் 2047 என சந்திரபாபு அறிவித்து உள்ளார். அதுவரை அவருடைய நிலைமை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோடாலி ஸ்ரீவெங்கடேஸ்வரராவ் எம்.எல்.ஏ. ரஜினி காந்தின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஹீரோவாகவும், இங்கு ஜீரோவாகவும் இருக்கும் ரஜினிகாந்தின் வார்த்தைகளை ஆந்திர மாநில மக்கள் பொருட்படுத்தமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்