search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உப்பு சத்தியாகிரகம்"

    • காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ராட்டையை சுற்றியும் தேசபக்தி பாடல்களை பாடி உபவாசம் மேற்கொண்டனர்.
    • அகஸ்தியன்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளினர்.

    வேதாரண்யம்:

    இந்திய சுதந்திரத்திற்கு முக்கிய பங்கு வகித்த உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் 93-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவினர் கடந்த 14-ந் தேதி திருச்சி ராஜன் மாளிகையில் இருந்து புறப்பட்டு தஞ்சை, கும்பகோணம், நீடாமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரணியம் வந்தடைந்தனர்.

    நேற்று வேதாரண்யம் வடக்கு வீதியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு கட்டிடத்தில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேதாரத்தினத்தின் பேரன் கயிலைமணி வேதாரத்தினம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ராட்டையை சுற்றியும் தேசபக்தி பாடல்களை பாடி உபவாசம் மேற்கொண்டனர்.

    காலை 6 மணி அளவில் வேதாரண்யம் உப்புசத்திய கிரக நினைவு கட்டிடத்தில் இருந்து ஊர்வலமாக 3 கி.மீ நடைபயணம் மேற்கொண்டு அகஸ்தியன்பள்ளியில் அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் உப்பு அள்ளினர். நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் போஸ், மாவட்ட வர்த்தக அணி பொதுசெயலர் அப்துல் உசேன், இளைஞர் காங்கிரஸ் ஆப்கான், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கமன் கோவிந்தராஜ், மகளிர் அணி

    சத்யகலா, செல்வராணி, நகரத் தலைவர் மெய்யா ரபீக், துணைத்தலைவர் வெங்கட்ராஜ், துணைச்செயலாளர் செல்வகுமார், ஐ.என்.டி.யூசி சங்க தங்கமணி, பாதயாத்திரை குழு சக்தி செல்வம் உள்ளிட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    ×