search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடற்கரை சாலை"

    • அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
    • பிரெஞ்சு தூதரகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    1789-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சி மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு வந்தது.

    மக்களாட்சியை நிறுவிய இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ஜூலை 14-ந் தேதியான நேற்று புதுவை பிரெஞ்சு தூதரகத்தில் தேசிய தின விழா நடந்தது.

    விழாவுக்கு பிரெஞ்சு துணை தூதர் லிசே போட் பரே தலைமை தாங்கி பிரெஞ்சு தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து இசை நிகழ்ச்சியும், விருந்தும் நடந்தது. விழாவிற்கு முக்கிய பிரமுகர்கள், பிரெஞ்சு குடிமக்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.

    அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விழாவையொட்டி பிரெஞ்சு தூதரகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் எதிரே வண்ண வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    • கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது.
    • போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை:

    சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 12-வது சென்னை மாரத்தான் இன்று நடந்தது. சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் பிரஷ் ஒர்க்ஸ் நிறுவனம் ஆதரவுடன் இந்த போட்டி நடந்தது. முழு மாரத்தான் (42.195 கிலோ மீட்டர்), பெர்பெக்ட் 20 மைலர் (32.186 கி.மீ.), அரை மாரத்தான் (21.097 கி.மீ.) மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டம் என 4 பிரிவுகளில் நடைபெற்றது.

    முழு மாரத்தான் பந்தயம் மெரீனா கடற்கரையில் உள்ள நேப்பியர் பாலத்தில் தொடங்கியது. கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது. பெர்பெக்ட் மைலர், 10 கிலோ மீட்டர் ஆகியவையும் நேப்பியர் பாலத்தில் இருந்துதொடங்கியது. அரை மாரத்தான் போட்டி எலியட்ஸ் கடற்கரை பகுதியில் இருந்து தொடங்கியது.

    4 பிரிவில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    • நடைபயிற்சிக்கு சென்றவர்கள் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
    • வறுவேல் அந்தோணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    சுசீந்திரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட சொத்த விளை பகுதியைச் சேர்ந்தவர் வறுவேல் அந்தோணி (வயது 65), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெசி லெட். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு வறுவேல் அந்தோணி தனியாக வசித்து வந்தார்.

    அவரது 3 மகன்களும் வெளிநாட்டில் வேலையில் உள்ளனர். மகள் திருமணமாகி புத்தளம் பகுதியில் வசித்து வருகிறார். வறுவேல் அந்தோணிக்கு மது பழக்கம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி அவர் காயம் அடைந்தார்.

    இதன் காரணமாகவும் மனைவி இறந்த சோகத்திலும் வறுவேல் அந்தோணி இருந்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து சென்ற அவர் இரவு வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் இன்று காலை சொத்தவிளை கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள், அங்குள்ள ஒரு மரத்தில் வறுவேல் அந்தோணி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள், வறுவேல் அந்தோணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் வறுவேல் அந்தோணி தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வது அழகிய கடற்கரை சாலைதான்.
    • கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வது அழகிய கடற்கரை சாலைதான். பழைய சாராய ஆலையிலிருந்து டூப்ளே சிலை வரையிலான 1 1/2 கி.மீ. அழகிய கடற்கரை சாலை புரமனேடு பீச் என அழைக்கப்படுகிறது.

    கடற்கரை சாலையில் தலைமை செயலகம், பிரெஞ்சு போர்வீரர்கள் நினைவிடம், கார்கில் நினைவிடம், அம்பேத்கர் மணிமண்டபம், காந்தி சிலை, நேரு திடல், சுங்கத்துறை அலுவலகம் என அழகிய கட்டிடங்கள், நினைவிடங்கள் உள்ளது.

    இந்த கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. வாகன போக்குவரத்து இல்லாத கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்த களம் அமைத்து தருவதுதான் ஹேப்பி ஸ்ட்ரீட்டின் நோக்கமாகும்.

    ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள திறமைகளை வெளிப்படுத்த விரும்புவோர் இந்த சாலையை பயன்படுத்தலாம். நடனம், நாட்டியம், ஓவியம், வேடிக்கை, விளையாட்டு என எதில் தனி திறமை இருந்தாலும், குழு திறமை இருந்தாலும் மக்கள் முன்பு வெளிப்படுத்தலாம்.

    பொதுமக்கள் பாதிக்காத வகையில் ஒரு சிறிய இடம் ஒதுக்கி தரப்படும். அதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். வெளி நாடுகளில் உள்ளதுபோல புதுவை கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற சுற்றுலாத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ×