என் மலர்
நீங்கள் தேடியது "மதுரை மீனாட்சி கோவில்"
- சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது.
- மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு இன்று இரவு 7 மணிக்கு மேல் புறப்படுகிறார்.
மதுரை:
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சியை ஏற்கும் விதமாக கடந்த 30-ந்தேதி பட்டாபிஷேகம் நடைபெற்றது.
மீனாட்சி அம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான திக்கு விஜயம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
இதையடுத்து சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று (புதன்கிழமை) மாசி வீதிகளில் தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5 மணிக்குமேல் சுந்தரேசப் பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கியது.
12-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன.
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் புறப்படுகிறார்.
வழிநெடுக உள்ள சுமார் 450 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகரை, மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நாளை நடக்கிறது. சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை மறுதினம் (5-ந்தேதி) அதிகாலையில், தங்கக்குதிரையில் வீற்றிருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இதைக் காண, தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் மதுரையில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
- ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஹன்சிகா பிரசித்த பெற்ற ஸ்தலங்களில் வழிபாடு செய்து வருகிறார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் உடன் 'மாப்பிள்ளை' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் 'எங்கேயும் காதல்', 'வேலாயுதம்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி 'போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, அதன்பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 'ரவுடி பேபி', 'காந்தாரி' போன்ற படங்கள் உள்ள நிலையில், 'நிஷா' என்ற தெலுங்கு வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
மேலும் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட ஹன்சிகா பிரசித்த பெற்ற ஸ்தலங்களில் வழிபாடு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹன்சிகா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்துள்ளார். அதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அபிஷேக பொருட்களை 26-ந்தேதி மாலைக்குள் மீனாட்சி கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம்.
- இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகாசிவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை வரை நடக்கிறது. இதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை 26-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 10.40 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.40 மணி வரையிலும் நடைபெறும்.
இதேபோல் சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கும், 4-ம் கால பூஜை 2 மணிக்கும் நடைபெறும். அதை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளன.
இதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த பழைய சொக்கநாதர் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில் உள்ளிட்ட உபகோவில்களிலும் இரவு முழுவதும் பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அன்று இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை 26-ந்தேதி மாலைக்குள் மீனாட்சி கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம்.
மேலும் மீனாட்சி அம்மன் கோவிலில் அரசு உத்தரவின்படி வடக்கு ஆடி வீதிகளில் 26-ந்தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை விடிய, விடிய ஆன்மிக இசை மற்றும் நடனம் நடைபெறுகிறது. சிவராத்திரியையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- திருக்கல்யாணம் முடிந்து இரவு மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவர்.
- பக்தர்கள் ஆயிரங்கால் மண்டபத்தை காண வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்கிறார்கள்.
அங்கு திருக்கல்யாணம் முடிந்து இரவு மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவர். எனவே அன்றைய தினம் காலை 4 மணி முதல் இரவு சுவாமி கோவிலை வந்தடையும் வரை கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும். மேலும் பக்தர்கள் ஆடி வீதிகள் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தை காண வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.