என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொ.மு.ச."
- முதியோர் இல்லத்தில் இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
- வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
திருப்பூர் :
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி திருப்பூர் மத்திய பேருந்து நிலைய தொ. மு.ச., ஆட்டோ நண்பர்கள் ஏற்பாட்டில் வசந்தம் முதியோர் இல்லத்தில் இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
வாலிபாளையம் செயலாளர் மு.க. உசேன், தி.மு.க., மாநகர நிர்வாகிகள் சிவபாலன், திலகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சசிகுமார், வாலிப்பாளையம் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சதிஷ்குமார் மற்றும் மாவட்ட, மாநகர பகுதி கழக நிர்வாகிகளும், மத்திய பேருந்து நிலைய தொ.மு.ச., ஆட்டோ நண்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஒப்பந்ததொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக தொமுச சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
- வருகிற 18ம் தேதி ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தர கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.
திருப்பூர் :
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் போயம்பாளையம் சக்தி நகரில் நடைபெற்றது.
மாநில இணைபொதுச் செயலாளர் ஈ.பி.சரவணன் தலைமை வகித்தார்.மாநில தலைவர் பண்டித் துரை கலந்து கொண்டு பேசுகையில், 'ஒப்பந்ததொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன்படி வருகிற 18ம் தேதி சென்னை ரோம்பேட்டையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தர கோரிக்கை மற்றும் திமுக ஆட்சியின் 2 ஆண்டு கால சாதனை விளக்க கூட்ட மாநாடு நடைபெற உள்ளது' என்றார். தொடர்ந்து அதன் நிகழ்ச்சி நிரல் அழைப்பிதழை பாண்டிதுரைவெளியிட சரவணன் பெற்றுக்கொ ண்டார்.
கூட்டத்தில் மாநில துணை தலைவர் பெருமாநல்லூர் செந்தில் (எ ) பழனிசாமி, பொருளாளர் இம்மானுவேல், கூடுதல் பொதுச்செயலாளர் செங்கை சுரேஷ், செயல் தலைவர் தஞ்சை மோகன், திருப்பூர் நிர்வாகிகள் சுரேஷ், மோகன், ஜோதிபாசு, பிரான்சிஸ்சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- அவிநாசி கோட்ட மின் வாரிய அலுவலகத்தில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
- பல மாதங்களாக தொமுச., சாா்பில் அளிக்கும் புகாா் மனுக்களுக்கு தீா்வு காணப்படுவதில்லை.
திருப்பூர் :
மின்வாரிய பிரச்சினைகள் தொடா்பாக அளிக்கப்படும் புகாா்கள் மீது அலுவலா்கள் அலட்சியமாக செயல்படுவதாக மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச.வினர் குற்றம்சாட்டியுள்ளனா்.
அவிநாசி கோட்ட மின் வாரிய அலுவலகத்தில் மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச. மாநில இணைப் பொதுச்செயலாளா் ஈ.பி. அ.சரவணன், மேற்பாா்வை பொறியாளா் முத்துவேலிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மின்பகிா்மான வட்ட பகுதிகளில் உள்ள மின்சார வாரிய பிரச்னைகள் தொடா்பாக அளிக்கும் புகாா் மனுக்களை அலுவலா்கள் கிடப்பில் போட்டு அலட்சியப்படுத்தி வருகின்றனா். குறிப்பாக திருப்பூா் மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட அவிநாசி, ஊத்துக்குளி, திருப்பூா் ஆகிய 3 மின் பகிா்மான கோட்டங்களில் மாதந்தோறும் நடைபெறும் குறைதீா்க்கும் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களை, கோட்ட செயற்பொறியாளா்கள் தங்களுடைய எல்லைக்கு உள்பட்டது இல்லை எனக் கூறி நிராகரித்து வருகின்றனா். அதிலும் கடந்த பல மாதங்களாக தொமுச., சாா்பில் அளிக்கும் புகாா் மனுக்களுக்கு தீா்வு காணப்படுவதில்லை. ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
- 500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு சக்கரை பொங்கல் மற்றும் வாழைப்பழம், பப்பாளி பழம், தர்பூசணி, நீர்மோர் வழங்கினார்.
- நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி. அ.சரவணன் செய்திருந்தார்.
திருப்பூா்:
மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் இன்று காலை திருப்பூா் பி.என் ரோடு போயம்பாளையம் ஆர்.கே நகர் மின்வாரிய அலுவலக பகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் க. செல்வராஜ் எம்.எல்.்ஏ.,
திறந்து வைத்து 500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு சக்கரை பொங்கல் மற்றும் வாழைப்பழம், பப்பாளி பழம், தர்பூசணி, நீர்மோர் வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன், பாண்டியன் நகர் பகுதி திமுகழக செயலாளர் வே.ஜோதி, மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் துணை தலைவர் ஆர். ரெங்கசாமி, ஹோட்டல் தொமுச பொது செயலாளர் மகேஷ்குமார், 22 வது வார்டு கவுன்சிலர் ராதா கிருஷ்ணன், நிர்வாகி சிவபாலன், உள்ளிட்டவர்கள் நீர்மோர், முககவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி. அ.சரவணன் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்