என் மலர்
நீங்கள் தேடியது "மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல்"
- 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 5 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
- இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது, தென்காசி மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்திட மாநில தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் கீழ் கண்டவாறு மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களை தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது.
அதன்படி ஊரகப் பகுதிகளில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 7 உறுப்பினர்களும், நகரப்பகுதிகளில் 180 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் 260 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களிலிருந்து 5 உறுப்பினர்களும் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேற்கண்டவாறு மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் விவரங்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் ஏதுமிருப்பின் அதன் விபரத்தினை சம்பந்தப்பட்ட வார்டு உறுப்பினர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் இன்று தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட பரவலாக்கம் திட்டம் தயாரிப்பதற்கு தேவையான மாவட்ட அளவிலான வள ஆதாரங்கள், விபரங்களை சேகரித்தல் மற்றும் நாளைய தேதி வரையிலான விபரங்களை பெறுதல், மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான கொள்ளைகள், திட்டங்கள் தயாரித்தல் மற்றும் முன்னுரிமை அளித்தல், மாவட்டத்திலுள்ள ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் தயாரித்த திட்டங்களை ஒருங்கிணைத்து மாவட்ட வளர்ச்சி திட்டம் தயாரித்தல் ஆகிய பணிகளை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் மேற்கொள்வார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி , மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) முத்துகுமார், தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜான், மாவட்ட ஊராட்சி செயலர் ராம்லால், மேலகரம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.