என் மலர்
நீங்கள் தேடியது "செர்பியா"
- வர்ச்சர் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது.
- போலீசார், அவசர கால மீட்பு படையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செர்பியா நாட்டின் பெல்கிரேட் பகுதியில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி எட்டு குழந்தைகள் மற்றும் காவலர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

14 வயது சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. செர்பியா தலைநகரில் உள்ள வர்ச்சர் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. எட்டு குழந்தைகள் உள்பட மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், ஆறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காயமுற்றனர்.
துப்பாக்கி சூடு ஐந்து நிமிடங்கள் வரை நடைபெற்று இருக்கிறது. போலீசார், அவசர கால மீட்பு படையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படிப்பில் நல்ல கவனம் செலுத்தி வந்த மாணவர் போதை பழக்கத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
- தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.
- நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
செர்பியா நாட்டு தலைநகர் பெல்கிரேடில் இஸ்ரேல் தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் தூதரகத்துக்கு வில்-அம்புடன் நபர் ஒருவர் வந்தார்.
அவர் திடீரென்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றார். அங்கிருந்த போலீஸ்காரர் மீது அம்பை எய்தாா். இதில் கழுத்தில் அம்பு பாய்ந்து காவலா் காயமடைந்தாா். உடனே போலீஸ்காரர் தற்காப்புக்காக அம்பு வைத்திருந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாா். இதில் அந்த நபா் உயிரிழந்தாா்.
தாக்குதலில் காயமடைந்த போலீஸ்காரரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதலில் ஈடுபட்ட நபர் குறித்த விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
காசாவில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலுடன் சொ்பியா நட்புறவை பேணி வரும் சூழலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக் கூறும்போது, `இது கொடூரமான பயங்கரவாத செயல். இது எந்த மதத்திற்கும் எந்த தேசத்திற்கும் காரணமாக இருக்க முடியாது. இது ஒரு தனிநபரின் குற்றம்' என்றார்.
இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, `செர்பியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே பயங்கரவாதத் தாக்குதலுக்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. தூதரகம் மூடப்பட்டுள்ளது மற்றும் தூதரகத்தின் எந்த ஊழியரும் காயமடையவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.
- விபத்தில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
- சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெல்கிரேட்:
செர்பியா நாட்டின் நோவி சட் நகரில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்தில் வழக்கம்போல பயணிகள் ரெயிலுக்கு காந்திருந்தனர்.
அப்போது திடீரென ரெயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த 4 பேரை மீட்டனர் ஆனாலும், இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது.
- ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.
செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 எம்பிக்கள் காயமடைந்தனர்.
இன்று (மார்ச் 04) கூடிய மக்களவை கூட்டத்தின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமயிலான ஆளும் கூட்டணி (SNS) யை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. ஆனால் இந்த அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் ராஜினாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் எதிர் கட்சி எம்பிக்கள் சிலர் தங்களது இருக்கைகளை விட்டு இறங்கி மக்களவை சபாநாயகரை நோக்கி ஓடினர். அவர்களுக்கும் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே மற்ற சில எதிர்கட்சி உறுப்பினர்கள் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற புகைக்குண்டுகளை மக்களவைக்குள் வீசி, அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 3 எம்பிக்கள் காயமடைந்துள்ளனர் என்றும் ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் ரெயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 15 பேர் பலியான விபத்தின் பின்னணியில் உள்ள ஊழலை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு பிரதமர் உசெவிக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஆனால் அவரது ராஜிநாமா மக்களவையில் உறுதி செய்யப்படாமல் மற்ற வேலைகளில் ஈடுபட்டதினால் எதிர் கட்சியினர் தற்போது அமளியில் ஈடுபட்டுள்ளனர்.